கோவையில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - கோரிக்கை மனுக்களுடன் குவிந்த மக்கள்!

கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில்‌ மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் நடைபெற்ற மக்கள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டத்தில்‌, 52 பேரிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட மேயர் கல்பனா ஆனந்தகுமார், மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.



கோவை: கோவை மாநகராட்சியில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அளிக்கப்பட்ட 52 மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி மேயர் கல்பனா உத்தரவிட்டார்.



கோவை மாநகராட்சியின் பிரதான அலுவலகத்தில்‌ மக்கள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டம் மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ தலைமையில்‌ இன்று (14.03.2023) நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநகராட்சி ஆணையாளா்‌ பிரதாப் மற்றும் மாநகராட்சி துணை ஆணையாளா்‌ ஷர்மிளா ஆகியோர் முன்னிலை வகித்தார்.



இந்த கூட்டத்தில்‌ மேயரிடம் மாநகராட்சியின்‌ அனைத்து பகுதிகளைச்‌ சோ்ந்த பொதுமக்கள்‌ 52 கோரிக்கை மனுக்களை அளித்தனர்‌. இதில்‌ பொதுமக்கள்‌ பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள்‌, சாலை வசதி, மின் விளக்குகள்‌, குடிநீர் வசதி, பாதாள சாக்கடை, தொழில்வரி, சொத்துவரி, காலியிடவரி, புதிய குடிநீர் இணைப்பு, பெயர்‌ மாற்றம்‌, மருத்துவம்‌, சுகாதாரம்‌, கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள்‌ குறித்த பல்வேறு கோரிக்கைகள்‌ அடங்கிய மனுக்கள்‌ பெறப்பட்டன.

கோரிக்கை மனுக்களைப்‌ பெற்றுக் கொண்ட மேயர் கல்பனா ஆனந்தகுமார்‌, மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட மண்டல உதவி ஆணையாளர்கள்‌, பொறியாளர்கள்‌ மற்றும்‌ அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில்‌, மண்டல்‌ உதவி ஆணையர்கள் முத்துராமலிங்கம், அண்ணாதுரை, மகேஷ் கனகராஜ், மோகனசுந்தரி, சேகர்‌, உதவி ஆணையா்‌ (வருவாய்‌) செந்தில்குமார்‌ ரத்தினம்‌, உதவி ஆணையர்‌ (கணக்கு) சுந்தர்ராஜ்‌, நகரமைப்பு அலுவலா்‌ கருப்பாத்தாள்‌, உதவி செயற்பொறியாளார்கள்‌, உதவி நகரமைப்பு அலுவலர்கள்‌, உதவி பொறியாளார்கள்‌, மாநகராட்சி அனைத்து அலுவலர்கள்‌ மற்றும்‌ பொதுமக்கள்‌ கலந்து கொண்டனர்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...