கோவையில் மார்ச் 14-ல் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் - மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு!

கோவை‌ மாநகராட்சியின் பிரதான அலுவலகத்தில் மார்ச் 14ஆம் தேதி காலை 11 மணியளவில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் நடைபெற உள்ள மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்று தங்கள் கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நாளை நடைபெற உள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரதாப் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் பிரதாப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,

கோவை‌ மாநகராட்சியின் பிரதான அலுவலகத்தில்‌ நாளை (14.02.2023) காலை 11.00 மணி முதல்‌ நண்பகல்‌ 1.00 மணி வரை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ தலைமையில்‌ மக்கள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்‌ நடைபெறவுள்ளது.

மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியிலுள்ள பொதுமக்கள்‌ பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள்‌, சாலை வசதி, மின்விளக்குகள்‌, குடிநீர்‌ வசதி, பாதாள சாக்கடை, தொழில்வரி, சொத்துவரி, காலியிடவரி, புதிய குடிநீர்‌ இணைப்பு, பெயர்‌ மாற்றம்‌, மருத்துவம்‌, சுகாதாரம்‌, கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள்‌ குறித்த கோரிக்கை மனுக்களை மேயரிடம்‌ அளித்து பயன்பெறலாம்‌.

இந்த கோரிக்கை மனுக்களின்‌ மீது துறை சார்ந்த மாநகராட்சி அலுவலர்களால்‌ உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்‌. எனவே, இந்த மக்கள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டத்திற்கு வரும்‌ பொதுமக்கள்‌ முகக்கவசம்‌ அணிந்து, கிருமிநாசினி பயன்படுத்தி, சமூக இடைவெளியை கடைபிடித்து தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கேரளா - தமிழக எல்லையில் ரயில் மோதி தாய் மற்றும் குட்டி யானை பலி; இரு மாநில வனத்துறையினர் விசாரணை

கேரளா எல்லைக்கு உட்பட்ட வாளையார்–சாவடிப்பாரா புதுப்பதி பகுதியில் மங்களூர்–சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் தாய் யானையும...

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...