தாராபுரம் அருகே அரசு அலுவலகம் முன்பு மது விற்பனை - நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தாராபுரம் அடுத்த பெரமியம் பகுதியில் அரசு அலுவலகம் முன்பு நடைபெறும் சட்ட விரோத மது விற்பனையைத் தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாராபுரம் அடுத்த பெரமியம் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: தாராபுரம் அருகே பெரமியம் பகுதியில் அரசு அலுவலகம் முன்பு சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாகப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம்-கரூர் சாலையில் காரையூரிலிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பெரமியம் கிராமத்தில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இப்பகுதியில் பெரும்பாலும் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அங்குள்ள கூலித் தொழிலாளிகளைக் குறிவைத்து மதுக்கடையில் உள்ளவர்கள் காலையில் 6 மணி முதல் டீ குடிப்பது போல் கூலித்தொழிலாளர்களுக்குத் தினசரி அப்பகுதியில் உள்ள பால்பண்ணை அருகிலும், கிராம நிர்வாக அலுவலக முன்பும் இருசக்கர வாகனத்தில் மது பாட்டில்களை வைத்துக் கொண்டு மது விற்கப்பட்டு வருகிறது.

அதனை அந்த பகுதி கூலித்தொழிலாளர்கள் இருமடங்கு விலை கொடுத்து வாங்கி குடித்து விட்டு வேலைக்குச் செல்லாமல் தினசரி சாலையில் சுற்றித் திரிந்து வருவது அந்த பகுதி மக்களிடையே பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. மதுவிற்கும் நபர் தனது இருசக்கர வாகனத்தில் குறிப்பிட்ட அளவு மதுபாட்டில்களை மட்டும் வைத்துக்கொண்டு விற்பனை செய்கிறார்.

இவ்வாறு மது விற்பனை செய்பவர்களைக் கண்டுபிடித்து தாராபுரம் மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...