கோவை விமான நிலையத்தில் இருந்து ஓராண்டில் 25 லட்சம் பேர் பயணம் - அதிகாரிகள் தகவல்!

2022 ஏப்ரல் முதல் 2023 பிப்ரவரி வரை கடந்த ஓராண்டில் கோவை விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை 25 லட்சத்தை கடந்துள்ளதாகவும், விமான நிலையம் சகஜ நிலைக்கு திரும்பி உள்ளதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.


கோவை: கோவை விமான நிலையத்தில் கடந்த ஓராண்டில் பயணிகள் எண்ணிக்கை 25 லட்சத்தை கடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி, பூனே, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கும் ஷார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளி நாடுகளுக்கும் விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது.

கொரோனா தொற்று பரவலுக்கு முன், தினசரி 36 விமானங்கள் இயக்கப்பட்டு வந்தது. அப்போது, ஆண்டுதோறும் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் கோவை விமான நிலையத்தை பயன்படுத்தி வந்தனர்.

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. தற்போது மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பி வருவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது,

கொரோனா பரவலுக்கு பின் உள்நாட்டு விமான போக்குவரத்து சகஜ நிலைக்கு திரும்பிவிட்டது. வெளிநாட்டு பிரிவில் முன்பு ஷார்ஜாவுக்கு ஒரு விமானம், சிங்கப்பூருக்கு 2, இலங்கைக்கு 1 வீதம் மொத்தம் 4 விமானங்கள் இயக்கப்பட்டன.

தற்போது இலங்கை மற்றும் சிங்கப்பூருக்கு இயக்கப் பட்டுவந்த 2 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் 2 விமானங்கள் மட்டுமே சர்வதேச பிரிவில் இயக்கப்படுகின்றன.

தினமும் குறைந்தபட்சம் 7,500 பயணிகளும், பண்டிகை உள்ளிட்ட முக்கிய நாட்களில் தினமும் 10 ஆயிரம் பயணிகளும் விமான நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

கடந்த 2022 ஏப்ரல் முதல் தற்போது வரை, கோவை விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை 25 லட்சத்தை கடந்துள்ளது. தொற்று பரவலுக்கு பின் விமான நிலையம் சகஜ நிலைக்கு திரும்பி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

இருப்பினும் அதிகரிக்கும் பயணிகள் எண்ணிக்கையால் இட நெருக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. விமான நிலையத்தில் வசதிகளை மேம்படுத்த வேண்டியது அவசியம். இதற்கு விமான நிலைய விரிவாக்க திட்டத்தை விரைந்து செயல்படுத்துவதே தீர்வாகும்.

நிலஆர்ஜித பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால் விரைவில் தமிழக அரசு நிலங்களை விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிலங்கள் ஒப்படைக்கப்பட்டால் ஓடு தள பாதை விரிவாக்கம், உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்துதல் உள்ளிட்ட அனைத்து வளர்ச்சி நடவடிக்கைகளும் உடனடியாக தொடங்கும்.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...