கோவையில் கள்ளக்காதல் ஜோடி தற்கொலை முயற்சி - சிகிச்சை பலனின்றி பெண் பலி!

கோவை சின்னியம்பாளையத்தில் தனியார் லாட்ஜில் தங்கி இருந்த கிருஷ்ணன் - கிருத்திகா இருவரும் எலி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்டனர். இதில் கிருத்திகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.



கோவை: நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்தவர் கிருத்திகா (வயது 26). இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில், கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனால் கிருத்திகா கடந்த 2 ஆண்டுகளாக தனது கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டில் வாழ்ந்து வந்தார். அப்போது சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணன் (வயது29) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அந்த நட்பு கள்ளக்காதலாக மாறியது.

இதனையடுத்து 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி கடந்த 5 நாட்களுக்கு முன்பு கோயமுத்தூர் வந்தனர். கோவை சின்னியம்பாளையத்தில் உள்ள ஒரு லாட்ஜில் அறைத்து எடுத்து தங்கினர். அங்கு 2 பேரும் எலி மருந்து குடித்தனர். வாடகை கேட்க சென்ற தங்கும் விடுதி ஊழியர்கள், இதைப் பார்த்து 2 பேரையும் மீட்டு இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு கிருத்திகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கிருஷ்ணனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. சம்பவம் குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...

கோவை பி.கே.புதூர் சிறுபாலத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.92க்கு உட்பட்ட பி.கே.புதூர், பெருமாள்சாமி நகரில் அமைக்கப்பட்டுள்ள சிறுபாலத்தின...

கோவையில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா, தொழிலாளர்களுக்கு பரிசுகள் வழங்கல்

கோவை கவுண்டம்பாளையம் மைதானத்தில் பி.ஜே.எம்.எம். அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம் சார்பில் விஸ்வகர்மா ஜெயந்தி மற்றும் தேசிய...

Systemic Corruption Persists Unabated: Coimbatore Unit of Anti-Corruption Movement

The Coimbatore district unit of the Anti-Corruption Movement submitted a representation to Tamil Nadu Chief Minister C J...