கோவையில் டிஜிபி சைலேந்திரபாபுவை ரோஜா பூ கொடுத்து வரவேற்ற வடமாநில தொழிலாளர்கள்!

கோவை சரவணம்பட்டியில் உள்ள ஸ்ரீ ஆனந்தகுமார் மில்லில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களை டிஜிபி சைலேந்திரபாபு நேரில் சந்தித்தார். வீடியோ வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று அறிவுறுத்தினார். தொழிலாளர்கள் டிஜிபி உடன் ஆர்வமுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.


கோவை: சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் மில்லில் பணி புரியும் வடமாநில தொழிலாளர்களை டிஜிபி சைலேந்திரபாபு நேரில் சந்தித்தார்.



கோவையில் சரவணம்பட்டி பகுதியில் உள்ள ஸ்ரீ ஆனந்தகுமார் மில்லில் டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.



இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு வருவதற்கு முன் வடமாநில தொழிலாளர்கள் சைலேந்திரபாபுவுக்கு ரோஜா பூ கொடுத்து வரவேற்றனர்.



அதைத் தொடர்ந்து தொழிலாளர்கள் மத்தியில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர், கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், சேலம் மற்றும் கோவை சரக காவல்துறை துணைத் தலைவர்கள் மற்றும் துணை ஆணையாளர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் தொழிலாளர்களுடன் இந்தியில் பேசி தொழிலாளர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தெரிவித்தார். கோவை மாநகர காவல் துறை என்றும் புலம்பெயர் தொழிலாளர்களுடன் உறுதுணையாக இருக்கும் என்றும் உறுதி அளித்தார்.

மேலும் டிஜிபி தலைமையில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டத்தை தொழிலாளர்கள் வீடியோ எடுத்து தங்கள் குடும்பங்களுக்கு தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக அனுப்ப காவல்துறை சார்பில் அறிவுறுத்தினர்.

அதேபோல டிஜிபி சைலேந்திரபாபு முன்னிலையில் சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் ராஜேஸ்வரி தொழிலாளர்களுடன் இந்தியில் பேசினார். புலம்பெயர் தொழிலாளர்கள் டிஜிபி உடன் தனித்தனியாகப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.



சிலர் செல்பி எடுத்துக் கொண்டனர்.

Newsletter

காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சிகளில் கூட்டணி தலைவர்கள் புகைப்படம்: தெளிவான வழிகாட்டுதல் கோரிக்கை

கோவை மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் S.P. சுதன் நாயக் ராஜ், காங்கிரஸ் கட்சியின் சொந்த நிகழ்ச்சிகளில் கூட்டணி கட்சி...

Coimbatore Police Museum to Offer Free Entry on September 6 for Police Day

The Tamil Nadu Police Museum in Coimbatore will offer free entry to the public and school and college students on Septem...

தாய்லாந்து சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில் கோவை சிறுவன் ரக்‌ஷனுக்கு 2-ம் இடம்

தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில், இந்தியா சார்பில் தமிழகத்தில் இருந்து பங்கேற்ற ஒரே போட்டியாளராக ‌...

மோசடி வழிகளில் நடைபெறும் மதமாற்றத்தைத் தடுக்க சட்டம் தேவை: கோவையில் VHP பொதுச்செயலாளர் மிலிந்த் பரந்தே

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் (VHP) சார்பில் நடைபெற்ற இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழாவில் பங்கேற்ற மிலிந்த் பரந்தே, கோயி...

வாட்ஸ்-அப் மூலம் கேரளா லாட்டரி சூதாட்டம்: உக்கடத்தில் வாலிபர் கைது; 2 ஸ்மார்ட்போன்கள் பறிமுதல்

கோவை உக்கடம் புதிய பஸ் நிலைய கழிப்பறை அருகே வாட்ஸ்-அப் குழுக்கள் மூலம் கேரளா லாட்டரி எண்களை விற்பனை செய்து சட்டவிரோதமாக...

சித்தாபுதூரில் பணம் வைத்து சூதாட்டம்: 6 பேர் கைது; 159 சீட்டுகள், ரூ.3,700 பறிமுதல்

கோவை சித்தாபுதூர் என்.ஜி.என். தெருவில் பணம் வைத்து சட்டவிரோதமாக சீட்டாடியதாகக் கூறப்படும் 6 பேரை காட்டூர் போலீசார் கைது...