நிதி நிறுவனம் நடத்தி பண மோசடி வழக்கில் 6 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் கோர்ட் தீர்ப்பு

நாமக்கல் மாவட்டத்தில் சன்ரைஸ் டிரேடிங் கார்பரேஷன் என்ற நிதி நிறுவனம் நடத்தி தங்கம், பரிசுப் பொருட்கள், பணம் தருவதாக கூறி பொதுமக்களிடம் ரூ.74 லட்சம் வரையில் வசூலித்து, மோசடி செய்த 6 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் தலா 12 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து கோவை டான்பிட் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.


கோவை: நாமக்கல் மாவட்டம் பரமத்தி ரோட்டில் சன்ரைஸ் டிரேடிங் கார்பரேஷன் என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தை கடந்த 2010-ம் ஆண்டு காலக்கட்டத்தில் நாமக்கல்லை சேர்ந்த முத்துக்குமார் என்பவர் நடத்தி வந்தார்.

இதில், முருகானந்தம், சரவணக்குமார், மாதையன், விஜயபாரதி, லியாகத் அலி ஆகியோா் வேலை பார்த்து வந்தனர். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெற்றுத்தருவதாக கூறி, பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து உள்ளனர். குறிப்பாக மூன்று கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து முதலீட்டாளர்களை ஈர்த்திருக்கின்றனர்.

அதன்படி, முதலீடு செய்வோருக்கு தங்கம், பொருட்கள், பணம் போன்றவை தரப்படும் என தெரிவித்திருக்கின்றனர். இதனை நம்பி 46 முதலீட்டாளர்கள் ரூ.74 லட்சத்து 41 ஆயிரத்து 384 செலுத்தினர். ஆனால், கூறியது போன்று முதலீட்டாளர்களிம் பணத்தை பெற்றுக்கொண்டு திருப்பி கொடுக்காமல் மோசடியில் ஈடுபட்டிருக்கின்றனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள், நாமக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் போலீசார் இவர்கள் 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து, வழக்கு விசாரணை கோவையில் உள்ள டான்பிட் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது.



இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணைகள் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. அதன்படி, முத்துக்குமார், முருகானந்தம், சரவணக்குமார், மாதையன், விஜயபாரதி, லியாகத்அலி ஆகிய 6 பேருக்கும் தலா 10 ஆண்டு சிறை தண்டனையும், ஒவ்வொருவருக்கும் தலா 12 லட்சத்து 60 ஆயிரம் வீதம், 75 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் அபராதமாக செலுத்த வேண்டுமென நீதிபதி ரவி உத்தரவிட்டுள்ளார்.

Newsletter

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...

கோவையில் ரூ.86 லட்சத்தில் 43 மின்கல வாகனங்கள் மற்றும் தெரு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் பவ...

கூடலூர் நகராட்சியில் 27 வார்டுகளிலும் தீவிர டெங்கு கொசு ஒழிப்புப் பணி

கோவை கூடலூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க கொசு மற்றும் கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் தீவி...

கோவையில் வீட்டில் நகை பணம் இல்லாததால் பொருட்களை உடைத்துவிட்டு தப்பிய திருடன்

கோவை ராமநாதபுரத்தில் ஐ.டி நிறுவன ஊழியர் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் திருடச் சென்ற ஆசாமி, நகை பணம் எதுவும் கிடைக்காததால் ஆத்...

கோவை அசோகபுரம் ஆசிரியர் காலனி ரவுண்டானாவில் 6 அடி உயர வெண்கல திருவள்ளுவர் சிலை திறப்பு

கோவை அசோகபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் முடிவில் உள்ள ஆசிரியர் காலனி ரவுண்டானாவில், தனி...