சிறுவாணி அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிவு - பொதுமக்கள் அச்சம்!

கோவை மாநகரின் முக்கிய நீராதாரமாக விளங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் கடுமையான வெயில் காரணமாக கடந்த சில நாட்களாக சரிந்து வந்த நிலையில், 15.90 அடியாக குறைந்துள்ளதால் கோடை காலத்தில் நீர் தட்டுப்பாடு ஏற்படுமோ என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.



கோவை: சிறுவாணி அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், குடிநீர் தேவைக்காக வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.



கோவை மாநகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது சிறுவாணி அணை. இந்த அணையில் இருந்து எடுக்கப்படும் குடிநீர், மாநகராட்சியில் உள்ள 26 வார்டுகளுக்கும், நகரையொட்டிய 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

49.53 அடி உயரம் கொண்ட சிறுவாணி அணையில், பாதுகாப்பு கருதி கேரள அரசு 45 அடி வரை மட்டுமே நீரைத் தேக்கி வைக்கிறது. இதன் காரணமாக, கடந்த 3 ஆண்டுகளாக சிறுவாணி அணை முழுக் கொள்ளளவை எட்டாமல் உள்ளது.

இந்நிலையில், கடந்த ஜூன் முதல் ஆகஸ்டு மாதங்கள் வரை தென்மேற்கு பருவமழை நன்றாகப் பெய்ததால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் 45 அடிக்கு மேல் சென்றது. அதன் பிறகு, அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டு, நீர்மட்ட ம் குறைக்கப்பட்டது.



இதனிடையே சிறுவாணி அணையின் நீர்மட் டம் 35 அடி முதல் 40 அடி வரை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துள்ளது. இதனால் சிறுவாணி அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

கடந்த வாரங்களில் 20 அடியாக இருந்த நீர்மட்டம், தற்போது, 15.90 அடியாக குறைந்துள்ளது. இதன் காரணமாக குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து எடுக்கப்படும் நீரின் அளவு 6.30 கோடி லிட்டரில் இருந்து 5 கோடி லிட்டராக குறைக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை கண்ணப்பநகரில் அண்ணாமலை தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியின் கண்ணப்பநகர் பகுதியில் தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் K.Annamalai, அதிமுக கோவை வடக்...

பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், தீவிர பிரச்சாரத்தால் ஏற்பட்ட காலில் வலி மற்று...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

தொண்டாமுத்தூர்: திமுக வேட்பாளர் என்.ஆர். கார்த்திகேயன் வெற்றிக்காக கட்சியினர் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் – செந்தில் பாலாஜி

தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டத்தில், கூட்டணிக் கட்சிகளின் நிர்வ...

வால்பாறை: திமுக வேட்பாளருக்கு ஆதரவு கோரி டாக்டர் மகேந்திரன் பரப்புரை..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் குட்டி என்கிற ஆ. சுதாகருக்கு ஆதரவு கோரி, பொள்ளாச்சி மற்றும் வால்பாறை தேர்தல்...