டெல்லியில் ஏப்ரல் 5-ல் பேரணி - தாராபுரத்தில் தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபயணம்!

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஏப்ரல் 5ஆம் தேதி 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் நடைபெறவுள்ள பேரணி குறித்து மக்களிடையே எடுத்துச் செல்லும் வகையில், தாராபுரத்தில் தொழிற்சங்கத்தினர் நடைபயணம் மேற்கொண்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது.

இந்திய தொழிற்சங்க மையம், அகில இந்திய விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்ரல் 5ஆம் தேதி டெல்லியில் பேரணி நடைபெற உள்ளது.

இந்த பேரணியை முன்னிட்டு, தாராபுரம் அடுத்த கரையூரில் இருந்து தாராபுரம் அண்ணாசிலை வரை நடைபயண பேரணி நடைபெற்றது. கரையூரில் துவங்கிய நடைபயண பேரணியை மாவட்ட செயற்குழு உறுப்பினர் மூர்த்தி துவக்கி வைத்தார்.



இந்த நடைபயணம் கரையூர், கொளத்துப்பாளையம், ராமபட்டிணம், மில்கேட், காளிபாளையம், மீனாட்சிபுரம், உப்புத்துறை பாளையம், கொளிஞ்சிவாடி, ஐந்து முனை சந்திப்பு, என்.என்.பேட்டை வழியாக அண்ணாசிலையை வந்தடைந்தது.

அண்ணாசிலையில் நடைபயணத்தை முடித்து வைத்து மாவட்ட செயலாளர் முத்துக்கண்ணன் பேசியதாவது,

வேலை நியமனத்தில் ஒப்பந்த முறை ஒழிக்கப்படுவதுடன் அக்னிபாத் திட்டம் ரத்து செய்ய வேண்டும். அனைத்து வேளாண் விளை பொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை செலவுக்கு மேல் 50 சதவீதம் உயர்த்தி தீர்மானிப்பதுடன், அது கிடைப்பதை உத்தரவாதப்படுத்தும் வகையில் மத்திய சட்டம் இயற்றப்படவேண்டும். அனைத்து வேளாண் விளைபொருட்களையும் அரசே கொள்முதல் செய்ய வேண்டும்.

மத்திய அரசு சிறு, குறு மற்றும் மத்திய தர விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் பெற்றுள்ள கடன்களை ஒரு முறை தள்ளுபடி செய்ய வேண்டும். 60 வயதான அனைவருக்கும் ரூ.5,000 ஓய்வூதியம் வழங்கவேண்டும். தொழிலாளர் தொகுப்பு சட்டம் நான்கையும் திரும்பப் பெறுவதுடன் மின்சார திருத்த மசோதா 2022 ஐ திரும்ப பெற வேண்டும்.

பொதுத்துறையை தனியார் மயமாக்குவதை நிறுத்த வேண்டும். பொது விநியோக திட்டத்தில் அனைவருக்கும் 14 வகையான அத்தியாவசியமான பொருட்களை வழங்க வேண்டும். வன உரிமை சட்டம் 2006 ஐ உறுதியாக அமல்படுத்துவதுடன் வன பாதுகாப்பு சட்டம் 1980 ல் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும்.

வீடற்ற அனைவருக்கும் வீடு வழங்க வேண்டும். விளிம்பு நிலை மக்கள் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்துவதுடன் அவர்களுக்கான சமூக நீதி உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த நடைபயணத்தில் தாலூகா செயலாளர் கனகராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் வெங்கட்ராமன், பொன்னுச்சாமி, மேகவர்ணன், செங்குட்டுவன், சத்தீஸ்வரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் சுதாகர் வேட்பு மனு தாக்கல்

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் குட்டி என்ற சுதாகர் ஏப்ரல் 7ஆம் தேதி வேட்பு மனுவை தாக்கல் செய்தார். ஆனைமலை...

சிங்காநல்லூரில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் வேட்புமனு தாக்கல்

சிங்காநல்லூர் தொகுதியில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். தேர்தல் பணிமனை திறப்பு விழாவுக...

கோவை வடக்கில் ராஜஸ்தான் முதல்வர் முன்னிலையில் வானதி சீனிவாசன் வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு தொகுதியில் BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ ராஜஸ்தான் முதல்வர் பஜன் லால் சர்மா, அண்ணாமலை முன்னிலையில்...

சூலூர் தொகுதி: AIADMK வேட்பாளர் வி.பி.கந்தசாமி வேட்பு மனு தாக்கல்

சூலூர் தொகுதியில் AIADMK வேட்பாளர் வி.பி.கந்தசாமி கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் புடைசூழ வேட்பு மனுவை தா...