கோவையில் குடும்பத் தகராறில் இளைஞர் கொலை - அக்காவின் கணவர் கைது

கோவை இடையர்பாளையத்தில் குடும்பத் தகராறில் வீட்டில் தனியாக இருந்த மனைவியின் தம்பியை கொலை செய்த பாலசுப்ரமணியன் என்பவரை பெரியநாயக்கன்பாளையம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



கோவை: கோவை இடையார்பாளையம் அடுத்துள்ள கோவில்மேடு சபேதார் 2வது வீதியில் தனது தாயார் வேலம்மாளுடன் வசிப்பவர் மணிகண்டன்(வயது33). இவர் மர வேலை செய்து வருகிறார். இவருக்கு தங்கமாரி மற்றும் செல்வி என 2 சகோதரிகள் உள்ளனர்.

கடந்த 21ம் தேதி வேலாண்டிபாளையம் சின்னண்ணன் செட்டியார் வீதியில் வசிக்கும் சகோதரி தங்கமாரியை அவரது கணவர் ஐயப்பன் அடித்ததாக மணிகண்டனுக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் 23ம் தேதி குடிபோதையில் இருந்த மணிகண்டன், சகோதரி தங்கமாரி வீட்டிற்கு சென்று ஐயப்பனை தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து இடையார்பாளையத்தில் வசிக்கும் தமது சகோதரி செல்விக்கு, தங்கமாரி போன் செய்து, தம்பி மணிகண்டனை அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளார். அதற்கு செல்வியின் கணவர் பாலசுப்ரமணியன், ஏற்கனவே உன் தம்பி குடிபோதையில் என்னுடன் வம்பு இழுக்கிறான், நான் வரவில்லை என்று கூறியதாக கூறப்படுகிறது.

இதனால் கோபமடைந்த தங்கமாரி மற்றும் செல்வி ஆகியோர் பாலசுப்ரமணியனை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். ஆத்திரமடைந்த பாலசுப்பிரமணியன், நேற்று மாமியார் வேலம்மாள் தனது வீட்டிற்கு வந்திருந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்த மணிகண்டனைப் பார்க்க சென்றுள்ளார்.

மதுபோதையில் சென்ற பாலசுப்பிரமணியன், இரவு 11.45 மணியளவில் மணிகண்டனுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும், இரும்பு கம்பியால் மணிகண்டனின் வலது நெற்றியில் அடித்தும், வலது மார்பு பகுதியில் கம்பியால் குத்தியும் கொலை செய்த பாலசுப்பிரமணியன், அங்கிருந்து கணுவாய் திருவள்ளுவர் நகரில் உள்ள அவரது அம்மா வீட்டுக்கு சென்று விட்டார்.

பின்னர், அவரது மனைவி செல்விக்கு போன் செய்த பாலசுப்பிரமணியன், உன் தம்பி இருக்கிறானா இல்லை செத்துட்டானா போய் பார் எனக் கூறியுள்ளார்.



இதையடுத்து, மணிகண்டனின் தாய், அவரது வீட்டுக்கு சென்று பார்த்த போது மணிகண்டன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்த தகவலின் பேரில் பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி நமச்சிவாயம், துடியலூர் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலையில் ஈடுபட்ட பாலசுப்பிரமணியனை, கணுவாயில் உள்ள தனது அம்மா வீட்டில் வைத்து காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குடிபோதையில் தனது மனைவியின் தம்பியை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் சுதாகர் வேட்பு மனு தாக்கல்

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் குட்டி என்ற சுதாகர் ஏப்ரல் 7ஆம் தேதி வேட்பு மனுவை தாக்கல் செய்தார். ஆனைமலை...

சிங்காநல்லூரில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் வேட்புமனு தாக்கல்

சிங்காநல்லூர் தொகுதியில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். தேர்தல் பணிமனை திறப்பு விழாவுக...