உடுமலையில் நாட்டு கோழிக்குஞ்சு பொரிப்பகத்தை திறக்க வேண்டும் - மலைவாழ் மக்கள் கோரிக்கை!

உடுமலை அருகே கடந்த 3 ஆண்டுகளாக செயல்படாமல் மூடப்பட்டு கிடக்கும் நாட்டு கோழிக்குஞ்சு பொரிப்பகத்தை மீண்டும் திறந்து செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மூடப்பட்டு கிடக்கும் நாட்டுக் கோழிக்குஞ்சு பொறிப்பகத்தை திறக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

உடுமலை அடுத்த குறிச்சிகோட்டை பகுதியில் கால்நடை துறை சார்பில் மேற்கு தொடர்ச்சி மலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கடந்த 2012-13ஆம் தேதி ஆண்டில் ரூ.30 லட்சம் செலவில் நாட்டு கோழி குஞ்சு பொரிப்பகம் அமைக்கப்பட்டது.

இங்கு, 2,000 முட்டைகளை அடைகாக்கும் இயந்திரம் நிறுவப்பட்டது. இதன் மூலம், ஆண்டுக்கு ஏழு தடவை 2,000 கோழி குஞ்சுகள் உற்பத்தி செய்ய முடியும் எனவும் திட்டமிடப்பட்டது.

குஞ்சுகளை ஒரு மாதம் வரை பராமரித்து இலவசமாகவும், ரூ.40 மற்றும் ரூ.20 என்ற திட்ட நிதி அடிப்படையில் மலைவாழ் மக்கள், சிறு குறு விவசாயிகள் மற்றும் கிராம மக்களுக்கு வழங்கப்பட்டது.



இந்த குஞ்சு பொரிப்பகம் தொடர்ந்து செயல்படுவதற்கு தொடர் செலவின நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதற்கான பணியாளர்களும் நியமிக்கப்படவில்லை. இதனால் கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த நாட்டு கோழிக்குஞ்சு பொரிப்பகம் பயன்பாடின்றி மூடி கிடக்கிறது.

கட்டிடமும் பாழடைந்து புதர் மண்டி கிடக்கிறது. எனவே அரசு உரிய நடவடிக்கை எடுத்து, நாட்டு கோழிக்குஞ்சு பொரிப்பகத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் புதிய Pre-Incubation Centre மற்றும் Startup Studio தொடக்கம்

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தின் 'கற்பகம் புத்தாக்கம் மற்றும் இன்குபேஷன் கவுன்சில்' (KIIC), தனது புதிய 'Pre-Incubatio...

2016 ஆனைமலை இளைஞர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை: கோவை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

ஆனைமலை காவல் நிலையத்தில் குற்ற எண் 369/2016-ன் கீழ் பதிவான கொலை வழக்கில், மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பாப்பான் @ சுதானந்தம...

ஜெம் வீரமணி வழக்கு: கோவை காவல் ஆணையர் உள்பட 2 ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் மற்றும் கூடுதல் ஆணையர் அருண் ஆகிய இரு மூத்த ஐபிஎஸ் அதிகா...

கோவை–போத்தனூர் இடையே பராமரிப்பு பணி: செப்.25, 26-ல் இரு மெமு ரயில் சேவையில் மாற்றம்

செப்டம்பர் 25 மற்றும் 26, 2026 ஆகிய தேதிகளில் கோவை-போத்தனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற...

கோவையில் பார் ஊழியரை கத்தியால் மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது

கோவை புலியகுளம் ரோடு பங்கஜாமில் ரோடு பகுதியில் உள்ள சன்ரிச் 11 - 11 பாரில் ஊழியர் பாண்டியராஜனிடம் இலவச மதுபானம் கேட்டு ம...

கோவை தடாகம் சாலையில் ஆம்புலன்ஸ் பணிமனையில் தீ விபத்து

கோவை தடாகம் சாலையில் உள்ள கோயில்மேடு அருகே ஆம்புலன்ஸ் பணிமனையில் திடீரென தீ பரவியது. இதனால் கரும்புகை மேகங்களாக சுற்றுவட...