உடுமலை அருகே தர்பூசணி சாகுபடி செய்த விவசாயிக்கு நேர்ந்த துயரம்

உடுமலை அருகே அரை ஏக்கரில் தர்பூசணி சாகுபடி செய்ய ரூ.25ஆயிரம் செலவு செய்து, ஒட்டுமொத்த விளைச்சலையும் விவசாயி ஒருவர் ரூ.1,000-க்கு விற்பனை செய்த அவலம் அரங்கேறியுள்ளது.


திருப்பூர்: உடுமலை அருகே அரை ஏக்கரில் தர்பூசணி சாகுபடி செய்த விவசாயி சரியான விளைச்சல் இல்லாத நிலையில் ஒட்டுமொத்தமாக ரூ. 1000-க்கு விற்பனை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து விவசாயி தரப்பில் கூறியதாவது, 'கடந்த காலங்களில் பருவமழைக் காலத்தில் விதைத்து விட்டு வீட்டுக்கு வந்தால் அறுவடை செய்வதற்குச் சென்றால் போதும் என்ற நிலை இருந்தது. ஆனால் தற்போது குறிப்பிட்ட இடைவெளியில் உரமிடுதல் மற்றும் மருந்து தெளிக்காவிட்டால் விளைச்சல் எடுக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டு விட்டது.

அதேநேரத்தில் உரியப் பராமரிப்புப் பணிகள் மேற்கொண்டும் விளைச்சல் எடுக்க முடியாத அவல நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. அரை ஏக்கரில் தர்பூசணி சாகுபடி செய்ய முக்கால் கிலோ விதைகள் தேவைப்படும். ஒரு கிலோ விதை ரூ.6 ஆயிரம் வரை விற்பனையாகிறது. இதுதவிர உழவு, ஆள் கூலி, உரம், பூச்சி மருந்து என அரை ஏக்கரில் ரூ.25 ஆயிரம் வரை செலவு பிடிக்கிறது.



கோடையில் நல்ல விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொண்டோம். ஆனால் காய்கள் சிறுத்து வெள்ளை பாய்ந்துள்ளதால் விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. 7 டன் வரை மகசூல் கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் மிகக்குறைந்த அளவிலான, தரமற்ற காய்களே கிடைத்தது.



இதனால் வயலை சுத்தம் செய்யும் நோக்கில் வெறும் ரூ.1000க்கு விற்பனை செய்தோம். இந்த நிலைக்குக் காரணம் என்ன என்பது தெரியவில்லை. தரமற்ற விதைகளா? வேறு எதுவும் வினோத நோய் தாக்குதலா? என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. இனி தர்பூசணி சாகுபடி செய்வதைக் கைவிடுவதா அல்லது விவசாயத்தையே கைவிடுவதா என்று எண்ணுமளவுக்கு மனது சோர்வடைந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...