கோவை குற்றப்பின்னணியில் பெண் ரவுடிகள்? - காவல்துறை விசாரணையில் அம்பலமான அதிர்ச்சி

கோவையில் ரவுடிகளை ஒடுக்கும் நடவடிக்கையாக குற்றப்பின்னணியில் உள்ளவர்களை கூண்டோடு கைது செய்து வரும் தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில், இளம் பெண்களும் ரவுடியிசத்தில் ஈடுபட்டுவரும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.



திருப்பூர்: கோவையில் கடந்த 12 மற்றும் 13 ஆம் நாட்களில் அடுத்தடுத்த இரண்டு கொலைகள் கொடுரமாக அரங்கேறின. பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் சத்திய பாண்டியன் என்ற ரவுடி கட்டப்பஞ்சாயத்து காரணமாக சஞ்சய் தலைமையிலான ரவுடி கும்பலால் நடுத்தெருவில் விரட்டி விரட்டி சரமாரியாக அறிவாளால் வெட்டி கொலைசெய்யப்பட்டார்.



அதற்கு அடுத்த நாள் காலை கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் பின்புறம், குற்ற வழக்கு ஒன்றில் ஆஜராக வந்த கோகுல் என்ற ரவுடியை ஜோஸ்வா, கெளதம் உள்ளடக்கிய ரவுடி கும்பல் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் அரிவாளால் ஓட ஓட வெட்டிவிட்டு அசால்ட்டாக நடந்து சென்றனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தனிப்படை அமைத்து நடத்திய விசாரனையில் இரு கொலைகளும் பழிக்கு பழி வாங்கும் நோக்கத்தில் செய்யப்பட்டிருப்பது அம்பலமானது.



இந்த நிலையில் ரவுடிகளின் கொட்டத்தை அடக்க கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், ரவுடி கும்பல்களை கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையிலே கோவை மாநகர் முழுவதும் வாகன தணிக்கை செய்து சந்தேகத்திற்கிடமானோர் வீடுகளில் தணிக்கையில் ஈடுபட்டிருக்கின்றனர். இதனை தொடர்ந்து கோவையின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் உள்ள ரவுடிகளின் பட்டியலையும் தயார் செய்த காவல்துறை, 100க்கும் மேற்பட்ட வீடுகளில் சோதனை நடத்தினர். 



10க்கும் மேற்பட்ட வழக்குகளை பதிவு செய்த போலீசார், 48 ரவுடிகளை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 



இதில் சில ரவுடிகளிடம் நன்னடத்தை பத்திரமெழுதி பெறப்பட்டிருக்கின்றன.



போலீசார் நடத்திய இந்த அதிரடி சோதனையில், கத்தி அறிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் கஞ்சா பொட்டலங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. கஞ்சா விற்பனை, போதை பொருட்கள் விற்பனை, கொலை, கொள்ளை, அடிதடி, வழிப்பறி வழக்குகளில் உள்ள முக்கிய குற்றவாளிகள் தலைமறைவாக இருக்கின்றனர். அவர்கள் கோயமுத்தூருக்கு வராமலே சோசியல் மீடியா மூலமாக லோக்கல் தாதாக்களை வழிநடத்தி வருகின்றனர். இந்த குற்ற செயல்களில் இளம் பெண்களும் ஈடுபடுவது போலீசார் நடத்திய விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

இந்த முக்கிய நெட்வொர்க்கை பிடிக்க தனிப்பட்டை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. கல்லூரி மாணவர்கள், இவர்களை ஹீரோவாக பார்க்கும் விதமாக சோசியல் மீடியாவில் ரவுடிகள் ரீல்ஸ் வெளியிட்டு தங்கள் பக்கமாக ஈர்த்திருக்கின்ற நிலையில், ஒட்டுமொத்த ரவுடி நெட்வொர்க்கையும் முடக்க போலீசார் முனைப்பு காட்டுவருகின்றன. சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படும் வகையில் ரவுடியிசம் செய்யும் ரவுடிகள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

மேலும், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் பயங்கர ஆயுதங்களுடன் ரீல்ஸ் வெளியிட்ட 15 ரவுடிகளை ஒரே நாளில் காவல்துறை கைது செய்து சிறைக்கு அனுப்பியுள்ளது. ரவுடிகளின் பட்டியலை தயார் செய்துவருகின்ற போலீஸார், தனித்தனியே ஒவ்வொறு தாதாக்களுக்கும் ஹிஸ்டிரி ஷீட் தயாரித்து கட்டம் கட்டி தூக்க கோவை போலீஸ் தயராகிவருகிறது. இதற்கென உளவுத்துறை போலீஸார் நியமிக்கப்பட்டு சமூக வலைதள பக்கங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...