கோவை - அவிநாசி சாலை மேம்பாலத்தில் ஒட்டப்பட்ட போஸ்டர்களை அகற்றும் பணிகள் தீவிரம்!

கோவைக்கு வரும் 18ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வரவுள்ள நிலையில் கோவை - அவிநாசி இடையேயான சாலையில் உள்ள மேம்பால தூண்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை அகற்றி விட்டு வர்ணம் பூசும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


கோவை: கோவை - அவினாசி சாலையில் உள்ள மேம்பாலங்களின் தூண்களில் ஒட்டப்பட்ட போஸ்டர்களை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டத்தில் உள்ள கோவை - அவினாசி இடையேயான சாலையானது மிக முக்கியமான சாலையாகும். இந்த சாலையில் ஏராளமான கல்லூரிகள், ஓட்டல்கள், நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

இதனால் இந்த சாலையில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாகவே காணப்படும். போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த சாலை 6 வழி சாலையாக மாற்றப்பட்டது.

இருந்த போதும் போக்குவரத்து நெரிசல் குறையவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், போக்குவரத்து வசதிக்காகவும் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது.

இதனிடையே 10.10 கி.மீ நீளத்தில் ரூ.1,621.30 கோடி மதிப்பில் கோல்டு வின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படுகிறது. தற்போது பாலத்திற்கான தாங்கு தூண்கள் அமைக்கப்பட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கோல்டு வின்சிலிருந்து விமான நிலையம் வரை தாங்கு தூண்களில் ஓடுதளம் அமைக்கும் பணி விரைவாக நடைபெற்ற வரும் நிலையில், சுவர் விளம்பரங்களை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

முதல் கட்டமாக காந்திபுரத்தில் உள்ள உயர்மட்ட மேம்பால தூண்கள் மற்றும் சாலையோரங்களில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் அகற்றப்பட்டு தமிழர்களின் பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் வகையில் ஓவியங்கள் வரையப்பட்டு வருகிறது.

இதன் அடுத்தபடியாக அவினாசி மேம்பால தூண்களிலும் சுவரொட்டிகள் அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வருகிற 18-ஆம் தேதி குடியரசுத் தலைவர் கோவை வர உள்ளார்.

இதன் காரணமாக தூண்களில் தண்ணீரை பீய்ச்சி அடித்து சுத்தம் செய்து வருகின்றனர். சாலையின் நடுவே உள்ள தடுப்புகள், அவினாசி மேம்பாலம் ரவுண்டானா ஆகிய இடங்களில் வண்ணம் பூசப்பட்டு கோவை மாவட்டமே புதுப்பொலிவு பெற்று வருகிறது.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...