கோவையில் கல்லூரி மாணவி தற்கொலை - துடியலூர் போலீசார் தீவிர விசாரணை!

கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியின் வகுப்பறையில் மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். சக மாணவிகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


கோவை: கோவை துடியலூர் அருகே உள்ள உருமாண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார். இவரது மகள் ஸ்ரீ வர்ஷா (வயது20). இவர் ஜி.என்.மில்ஸ் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் ஆங்கிலம் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.

ஸ்ரீ வர்ஷாவிற்கு வீட்டில் திருமணத்திற்கு வரன் பார்த்ததாக தெரிகிறது. ஆனால், திருமணம் செய்ய தற்போது விருப்பில்லை என அவர் கூறி வந்துள்ளார்.

இந்நிலையில், வழக்கம் போல் கல்லூரிக்கு வந்த ஸ்ரீவர்ஷா யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீரென அவர் கையில் மறைத்து வைத்திருந்த விஷத்தை குடித்து மயங்கி விழுந்துள்ளார். இதை கண்ட சக மாணவ, மாணவிகள் ஸ்ரீ வர்ஷாவை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த மாணவி ஸ்ரீ வர்ஷா, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக துடியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, மாணவியின் தற்கொலை குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Newsletter

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...