கோவை பீளமேட்டில் பாம்பு கடித்து வடமாநில தொழிலாளி உயிரிழப்பு!

கோவை பீளமேடு பகுதியில் மதுபோதையில் கவரில் இருந்த கட்டுவிரியன் பாம்பைப் பிடிக்க முயன்றபோது,பாம்பு கடித்து சிகிச்சை பெற்று வந்த வடமாநில தொழிலாளி திலீப் கவுர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


கோவை: பீளமேடு பகுதியில் வடமாநில தொழிலாளி பாம்பு கடித்து இறந்த சம்பவம் சக தொழிலாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பீளமேடு பகுதியில் அசாம் மாநில வாலிபர்கள் தங்கியிருந்து கட்டிட வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் அணில் நாயக் என்ற வாலிபர் கடந்த 5ஆம் தேதி வேலை செய்து கொண்டிருந்த போது, இடிபாடுகளிலிருந்த கட்டுவிரியன் பாம்பு ஒன்றை அவரை கடிக்க முயன்றுள்ளது.

இதில் சுதாரித்துக் கொண்ட அவர், பாம்பை அடித்து கவரில் போட்டு வைத்துள்ளார். பின்பு அதை எடுத்துச் செல்லும் போது, அவருடன் மதுபோதையில் வந்த திலீப் கவுர் என்ற வாலிபர் கவரில் இருந்த பாம்பைப் பிடிக்க முயன்றுள்ளார். இதில் அந்த பாம்பு எதிர்பாராத விதமாக திலீப் கவுர் கையை கடித்துள்ளது.

வலியால் துடித்த அவரை சக தொழிலாளர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்குச் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். கட்டுவிரியன் பாம்பு கடித்து அசாம் மாநில தொழிலாளி இறந்தது சக தொழிலாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...

கோவையில் ரோட்டராக்ட் கிளப் ஆஃப் கோவை நைட்ஸ் சார்பில் ARENA ஸ்போர்ட்ஸ் மீட்

கோவை வெங்கிட்டாபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கமல்நாதன் நினைவு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், தேசிய விளையாட்டு தினத்தை மு...

கோவை வார்டுகள் 12, 13-ல் வளர்ச்சிப் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.12 மற்றும் 13க்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகள் தொட...