கோவை மதுக்கரை அருகே வீட்டில் தீ - டிவி, நகைகள், ஆவணங்கள் எரிந்து நாசம்!

கோவை மதுக்கரை அருகே பாலத்துறையில் வீரக்குமார் என்பவர் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் டிவி, நகைகள், ஆவணங்கள் உள்ளிட்ட பொருட்கள் தீயில் கருகி நாசமானது. மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.



கோவை: கோவை மதுக்கரை அருகே குடும்பத்துடன் பழனிக்கு பாதயாத்திரை சென்ற நேரத்தில் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டு, நகைகள், டிவி உள்ளிட்டவை தீயில் எரிந்து நாசமானது.

கோவை மதுக்கரை அடுத்த பாலத்துறை பகுதியை சேர்ந்தவர் வீரக்குமார் (34). கூலி வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் குடும்பத்துடன் பழனிக்கு பாதயாத்திரை சென்றதாக தெரிகிறது.

அப்போது பொள்ளாச்சி அருகே சென்றபோது அவரது வீட்டின் அருகே வசித்து வரும் ராஜேந்திரன் என்பவர் செல்போன் மூலம் அழைத்து வீட்டில் உள்ளே தீப்பிடித்து எரிவதாக தகவல் அளித்துள்ளார். மேலும் அவர் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் அளித்தார்.



இதையடுத்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று தீயை அணைத்தனர். அதற்குள் வீட்டிலிருந்த டி.வி, உள்ளிட்ட பொருட்கள் மற்றும் 4.5 சவரன் தங்க நகை, பல்வேறு ஆவணங்கள் சான்றிதழ்கள் தீயில் எரிந்து நாசமானது.

இச்சம்பவம் தொடர்பாக மதுக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் பழனிக்கு செல்வதற்கு முன்னதாக வீட்டில் விளக்கு பற்றவைத்து சென்றதாக தெரிகிறது. எனவே விளக்கு மூலம் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

Newsletter

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...

கோவை பி.கே.புதூர் சிறுபாலத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.92க்கு உட்பட்ட பி.கே.புதூர், பெருமாள்சாமி நகரில் அமைக்கப்பட்டுள்ள சிறுபாலத்தின...

கோவையில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா, தொழிலாளர்களுக்கு பரிசுகள் வழங்கல்

கோவை கவுண்டம்பாளையம் மைதானத்தில் பி.ஜே.எம்.எம். அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம் சார்பில் விஸ்வகர்மா ஜெயந்தி மற்றும் தேசிய...

Systemic Corruption Persists Unabated: Coimbatore Unit of Anti-Corruption Movement

The Coimbatore district unit of the Anti-Corruption Movement submitted a representation to Tamil Nadu Chief Minister C J...