கோவை மாவட்டத்தின் 183வது ஆட்சித்தலைவராக கிராந்திகுமார் பாடி இன்று பொறுப்பேற்பு

கோவை மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்று கொண்ட கிராந்தி குமார் பாடி, அரசின் திட்டங்கள், அரசின் உதவிகளை மக்களிடம் கொண்டு சேர்க்க உடனடி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.



கோவை: கோவை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்ட கிராந்திகுமார் பாடி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.



கோவை மாவட்ட ஆட்சியராக இருந்த ஜி.எஸ்.சமீரன் சென்னைக்கு மாற்றப்பட்டார். இதனைதொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியராக கிராந்திகுமார் பாடி நியமிக்கப்பட்டார்.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொறுப்பேற்பு நிகழ்ச்சியில் ஏற்கனவே கோவை மாவட்ட ஆட்சியராக இருந்து சமீரன், கிராந்திகுமார் பாடியிடம் கோப்புகளை ஒப்படைத்தார். அந்த கோப்புகளில் கையெழுத்திட்டு கிராந்திகுமார் பாடி கோவை மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டார்.



இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, கோவை மாவட்டத்தில் அரசு திட்டங்கள், அரசு உதவிகள் அனைத்தையும் மக்களிடம் உடனடியாக கொண்டு சேர்க்கவும், மக்களின் குறைகளை தீர்க்கவும், மாவட்டத்தின் உட்கட்டமைப்புகள், அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய அனைத்து துறைகளுடன் ஒருங்கிணைந்து நடவடிக்கைகள் எடுப்பேன்.

அனைத்து துறைகளில் இருக்கின்ற முதன்மை திட்டங்கள் குறித்து முதல்வர் விளக்கம் அளித்துள்ளார். களத்திற்கு சென்று அனைத்து அரசு திட்டங்களையும் பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என முதல்வர் கூறியுள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.

2015ம் ஆண்டு ஐ.ஏ.எஸ் தேர்ச்சி பெற்ற கிராந்திகுமார் பாடி, இதற்கு முன்னதாக திருப்பூர் மாநகராட்சி ஆணையாளராக இருந்துள்ளார். அதற்கும் முன்பு நாமக்கல் மாவட்டத்தில் உதவி ஆட்சியராகவும் பணியாற்றி உள்ளார்.

மேலும், ஈரோடு மாவட்டத்தில் கமர்சியல் டாக்ஸ் மற்றும் ஜி.எஸ்.டி யில் இணை ஆணையாளராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிதாக பொறுப்பேற்ற கிராந்திகுமார் பாடி, கோவை மாவட்டத்தின் 183வது ஆட்சித்தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...