நீலகிரி கூடலூர் அருகே டிப்பர் லாரியில் ரூ.1.12 லட்சம் மதிப்புள்ள குட்கா கடத்தல் - இருவர் கைது!

கூடலூர் கோழிப்பாலம் அருகே போலீசார் நடத்திய வாகன சோதனையில், கட்டுமான பொருட்கள் ஏற்றிச் சென்ற டிப்பர் லாரியில் கடத்தி செல்லப்பட்ட ரூ.1.12 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூரில் டிப்பர் லாரியில் கடத்திச் சென்ற ரூ.1.12 லட்சம் மதிப்பிலான குட்கா போதை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் இருவரை கைது செய்துள்ளனர்.

கூடலூர் பகுதி தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா என 3 மாநிலங்களும் சந்திக்கும் இடமாக உள்ளது. இதன் காரணமாக அவ்வழியாக கடத்தல் சம்பவம் அதிகமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது.

குறிப்பாக ஹான்ஸ் போன்ற குட்கா போதை பொருட்கள் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. தொடர்ந்து தமிழக, கேரளா, கர்நாடக எல்லை சோதனை சாவடியில் தமிழக போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு போதை பொருட்கள் கடத்தலை தடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் பிரபாகர் உத்தரவு படி கூடலூர் போலீசார் கோழிப்பாலம் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது கேரள மாநிலம் மம்பாடு பகுதியிலிருந்து கட்டுமான பொருட்களை ஏற்றி வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.



அப்போது அந்த லாரியிலிருந்து ஒரு லட்சத்தி 12 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் மறைத்து வைத்து கடத்தி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.



இதனையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த போலிசார் லாரியில் இருந்த அஸ்கர்(37) மற்றும் முஜீப் ரஹ்மான் (32) ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் சுதாகர் வேட்பு மனு தாக்கல்

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் குட்டி என்ற சுதாகர் ஏப்ரல் 7ஆம் தேதி வேட்பு மனுவை தாக்கல் செய்தார். ஆனைமலை...

சிங்காநல்லூரில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் வேட்புமனு தாக்கல்

சிங்காநல்லூர் தொகுதியில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். தேர்தல் பணிமனை திறப்பு விழாவுக...

கோவை வடக்கில் ராஜஸ்தான் முதல்வர் முன்னிலையில் வானதி சீனிவாசன் வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு தொகுதியில் BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ ராஜஸ்தான் முதல்வர் பஜன் லால் சர்மா, அண்ணாமலை முன்னிலையில்...

சூலூர் தொகுதி: AIADMK வேட்பாளர் வி.பி.கந்தசாமி வேட்பு மனு தாக்கல்

சூலூர் தொகுதியில் AIADMK வேட்பாளர் வி.பி.கந்தசாமி கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் புடைசூழ வேட்பு மனுவை தா...

தொண்டாமுத்தூரில் AIADMK வேலுமணி வேட்புமனு: அண்ணாமலை உடன் தாக்கல்

தொண்டாமுத்தூர் தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் S.P. வேலுமணி இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். BJP முன்னாள் மாந...