கோவை மாநகரில் சிறப்பு வாகன தணிக்கை - ஒரே நாளில் 618 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாநகரில் ஒரே நாளில் 618 பேர் மீது மோட்டர் வாகனச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாநகர காவல்துறை தகவல்.


கோவை: கோவை மாநகரில் தலைக்கவசம் அணிந்து பயணம் செய்த 971 இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு வாழ்த்து தெரிவித்து, தொடர்ந்து வாகனங்களை இயக்கும் போது பாதுகாப்பு வழிமுறைகளை முழுமையாகப் பின்பற்றுமாறு அறிவுரைகள் வழங்கப்பட்டது.

கோவை மாநகரத்தில், இவ்வாண்டு வாகன விபத்துகள் நடைபெறாமல், தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு "விபத்தில்லா கோவை" உருவாக்கும் பொருட்டு, கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவுப்படி, இன்று கோவை மாநகரில் 10 இடங்களில் (காளப்பட்டி ரோடு, பிளமேடு, BPL ஜங்ஷன், லட்சுமி மில் ஜங்ஷன், சரவணம்பட்டி சோதனை சாவடி, துடியலூர் ரோடு, ரத்தினம் காலேஜ் பொள்ளாச்சி ரோடு, நேரு காலேஜ் கிருஷ்ணா காலேஜ் பாலக்காடு சாலை, உக்கடம் லாரி பேட்டை) சிறப்பு வாகன தணிக்கை நடத்தப்பட்டது.

இந்த சிறப்பு வாகன தணிக்கை முகாமில், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டிய 928 இருசக்கர வாகன ஓட்டிகளில், 618 நபர்கள் மீது மோட்டார் வாகன சட்டப்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டு. 310 நபர்கள் எச்சரித்து அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும், 1899 இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும், அந்தந்த சிறப்பு வாகன தணிக்கை முகாமில், தன்னார்வ அமைப்புகள் மூலம் விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தப்பட்டு, அதன் தொடர்ச்சியாக, சிறுவர்கள் போக்குவரத்து பூங்காவில் (CHILDREN'S TRAFFIC PARK) உள்ள பயிற்சி மையத்தின் மூலமும், விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தப்பட்டது.

மேலும் தலைக்கவசம் அணிந்து பயணம் செய்த 971 இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டு, தொடர்ந்து வாகனங்களை இயக்கும் போது பாதுகாப்பு வழிமுறைகளை முழுமையாகப் பின்பற்றுமாறு அறிவுரைகள் வழங்கப்பட்டது.

Newsletter

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் புதிய Pre-Incubation Centre மற்றும் Startup Studio தொடக்கம்

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தின் 'கற்பகம் புத்தாக்கம் மற்றும் இன்குபேஷன் கவுன்சில்' (KIIC), தனது புதிய 'Pre-Incubatio...

2016 ஆனைமலை இளைஞர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை: கோவை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

ஆனைமலை காவல் நிலையத்தில் குற்ற எண் 369/2016-ன் கீழ் பதிவான கொலை வழக்கில், மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பாப்பான் @ சுதானந்தம...

ஜெம் வீரமணி வழக்கு: கோவை காவல் ஆணையர் உள்பட 2 ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் மற்றும் கூடுதல் ஆணையர் அருண் ஆகிய இரு மூத்த ஐபிஎஸ் அதிகா...

கோவை–போத்தனூர் இடையே பராமரிப்பு பணி: செப்.25, 26-ல் இரு மெமு ரயில் சேவையில் மாற்றம்

செப்டம்பர் 25 மற்றும் 26, 2026 ஆகிய தேதிகளில் கோவை-போத்தனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற...

கோவையில் பார் ஊழியரை கத்தியால் மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது

கோவை புலியகுளம் ரோடு பங்கஜாமில் ரோடு பகுதியில் உள்ள சன்ரிச் 11 - 11 பாரில் ஊழியர் பாண்டியராஜனிடம் இலவச மதுபானம் கேட்டு ம...

கோவை தடாகம் சாலையில் ஆம்புலன்ஸ் பணிமனையில் தீ விபத்து

கோவை தடாகம் சாலையில் உள்ள கோயில்மேடு அருகே ஆம்புலன்ஸ் பணிமனையில் திடீரென தீ பரவியது. இதனால் கரும்புகை மேகங்களாக சுற்றுவட...