உடுமலை கிரஷர் லாரிகளை சிறைபிடித்த கிராம மக்கள் - போக்குவரத்து பாதிப்பு!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கல், மணல் ஏற்றிச்சென்ற கிரஷர் லாரிகளை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. லாரிகள் அதிக வேகத்தில் இயக்கப்படுவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன், பாதுகாப்பற்ற நிலை உள்ளதாக மக்கள் புகார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த துங்காவி சுற்றுவட்டார பகுதிகளில் கல்குவாரிகள் மற்றும் கிரஷர்கள் செயல்பட்டு வருகிறது. அவற்றிலிருந்து கற்கள் மற்றும் ஜல்லிகளை கொண்டு செல்வதற்கு அதிக எண்ணிக்கையிலான லாரிகள் இயக்கப்படுகின்றன. இதனால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாகக் கூறி பொதுமக்கள் அடிக்கடி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், துங்காவி-வேடப்பட்டி சாலையில் மலையாண்டிபட்டினம் பிரிவுக்கு அருகில் கல் மற்றும் ஜல்லிகளை ஏற்றிச்செல்லும் 10-க்கும் மேற்பட்ட லாரிகளை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனையடுத்து அங்கு விரைந்த போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனாலும் போராட்டம் தொடர்ந்ததால் சம்பவ இடத்துக்கு வந்த மடத்துக்குளம் தாசில்தார் மேற்கொண்ட சமாதான முயற்சிக்குப் பிறகு போராட்டத்தைக் கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:

முக்கிய சாலையில் அமைந்துள்ள இந்த கிரஷரில் கற்களை அரைக்கும் பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுவதால் நீண்ட தூரம் வரை புழுதி மண்டலம் ஏற்படுகிறது. இதனால் அருகிலுள்ள குடியிருப்புவாசிகளுக்கு பலவிதமான சுவாசப் பிரச்சினைகள், தோல் நோய்கள் போன்றவை ஏற்படுகிறது.

மேலும் தென்னை, வாழை, மல்பெரி போன்ற பயிர்களில் புழுதி படிவதால் மகசூல் பாதிக்கிறது. இதுதவிர, இரவு பகலாக லாரிகள் அதிக வேகத்தில் இயக்கப்படுவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன், பாதுகாப்பற்ற நிலை உள்ளது. மேலும், அதிக எடையுள்ள வாகனங்கள் தொடர்ந்து இயக்கப்படுவதால் சாலைகளும் சேதமடைகிறது. எனவே இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று வேண்டுகோள் விடுத்தனர்.

Newsletter

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...