மேட்டுப்பாளையம் மருதூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கவுன்சிலர் தர்ணா - பரபரப்பு!

கோவை மாவட்டம் மருதூர் ஊராட்சி தலைவர் தன்னிச்சையாக கட்டிட வரைபட அனுமதி வழங்குவதாக குற்றம்சாட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கவுன்சிலர் ஒருவர் திடீர் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள மருதூர் ஊராட்சியில் மாதாந்திர மன்றக் கூட்டம் நடைபெற்றது. மருதூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தலைவர் பூர்ணிமா ரங்கராஜ் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் 23 தீர்மானங்கள் மன்ற ஒப்புதலுக்காக வைக்கப்பட்டு, விவாதத்திற்கு பின் நிறைவேற்றப்பட்ட நிலையில் ஒன்றாவது வார்டு கவுன்சிலர் ரங்கநாதன் திடீரென தர்னா போராட்டத்தில் ஈடுபட்டார்.

மருதூர் ஊராட்சியில் இதுவரை 46 பேருக்கு மன்ற ஒப்புதல் இன்றி ஊராட்சி தலைவர் தன்னிச்சையாக செயல்பட்டு கட்டிட வரைமுறை அனுமதி வழங்கியுள்ளதாக கூறி கவுன்சிலர் ரங்கநாதன் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

தனி ஒருவனாக அமர்ந்து ஊராட்சி மன்ற அலுவலகத்தில் போராட்டம் நடத்திய அவர், தனது வார்டு பகுதியில் எந்த அடிப்படை வசதியும் செய்து தரவில்லை என குற்றம்சாட்டினார்.

போராட்டம் குறித்து காரமடை காவல்துறை அதிகாரிகளுக்கும் வட்டார வளர்ச்சி அலுவலருக்கும் தகவல் அளிக்கபட்டது. இதையடுத்து, அங்கு சென்ற அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலரிடம் பேச்சு வார்த்தை நடத்தி, கட்டிட வரைபட அனுமதி சம்பந்தமாக சந்தேகம் இருந்தால் புகாராக எழுதி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கொடுத்தால் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து கவுன்சிலர் ரங்கநாதன் போராட்டத்தை கைவிட்டார்.

Newsletter

கேரளா - தமிழக எல்லையில் ரயில் மோதி தாய் மற்றும் குட்டி யானை பலி; இரு மாநில வனத்துறையினர் விசாரணை

கேரளா எல்லைக்கு உட்பட்ட வாளையார்–சாவடிப்பாரா புதுப்பதி பகுதியில் மங்களூர்–சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் தாய் யானையும...

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...