'ஈரோடு இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கே வெற்றி கிடைக்கும்..!' - அமைச்சர் எ.வ.வேலு நம்பிக்கை

எதிர்க்கட்சி சட்டமன்ற தலைவரால் சட்டமன்றத்தில் கேள்வி மட்டும் தான் எழுப்ப முடியும். அது தவிர அவரால் வேறு ஒன்றும் செய்ய முடியாது. தங்கள் தொகுதிக்கு தேவையான திட்டம் குறித்து அவரால் கேட்க முடியுமா? என்று அமைச்சர் எ.வ.வேலு கேள்வி.


ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் சட்ட மன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா மறைந்தார். இந்த நிலையில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் பணிகள் நடந்துவருகின்றன. களத்தில் உள்ள கட்சிகள் தேர்தல் அலுவலகங்களை திறந்து வருகின்றன.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக களமிறங்கியிருக்கின்ற ஈ வி கே எஸ் இளங்கோவன் வெற்றி பெற செய்ய திமுக தேர்தல் வியூகம் வகுத்திருக்கின்றன. அதனடிப்படையில் தேர்தல் பணிகளில் ஈடுபட நசியனூர் சாலையில் அமைக்கப்பட்டிருக்கின்ற தேர்தல் பணிமனையை அமைச்சர்கள் எ.வ. வேலு, முத்துசாமி ரிப்பன் வெட்டி திறந்தனர்.



பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது:

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வெற்று பெறுவது உறுதி. ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் இன்று வந்துள்ளது. திமுக கூட்டணி இருக்கிற காங்கிரஸ் வேட்பாளர் ஈ வி கே எஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். மதசார்பற்ற கூட்டணியில் இருக்கின்ற ஒட்டுமொத்த தலைமை கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்களிடத்தில் நேரடியாக சென்று பார்த்த போது வரவேற்பு உள்ளது. திமுகவுக்கு தான் வாக்களிக்க மக்கள் முடிவு செய்துவிட்டனர். பெண்கள் வாக்கு திமுகவுக்கு தான். முதலமைச்சர் பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை திட்டி உள்ளார். புதுமைப்பெண் திட்டம் மூலம் மாதம் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இது எந்த மாநிலங்களையும் நடக்காத ஒன்று.

திருமகன் ஈவேரா தொகுதி மக்களுக்கு பல்வேறு பணிகளை அவர் செய்துள்ளார். ஈரோடு மாநகர பகுதியில் 400 கோடி அளவுக்கு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் தொடர்ந்து நடக்க வேண்டும். அதற்கு ஆளுங்கட்சிக்கு உறுதுணையாக இருப்பவர் எம்எல்ஏவாக இருந்தால் தான் அனைத்து பணிகளும் நடக்கும்.

எதிர்க்கட்சி சட்டமன்ற தலைவரால் சட்டமன்றத்தில் கேள்வி மட்டும் தான் எழுப்ப முடியும். அது தவிர அவரால் வேறு ஒன்றும் செய்ய முடியாது. தங்கள் தொகுதிக்கு தேவையான திட்டம் குறித்து அவரால் கேட்க முடியுமா?... எனவே திருமகன் ஈவேரா விட்டு சென்ற பணிகளை முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றால் காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெற செய்யுங்கள்.

ஆளும் கட்சியோடு கூட்டணியில் இருக்கின்ற காங்கிரசுக்கு வாக்களிக்க மக்கள் தெளிவாக உள்ளனர். அதிமுக சார்பாக செங்கோட்டையன் எம் எல் ஏ ஒரு பேட்டியில் கூறும்போது, இந்த தேர்தல் முடிவு என்பது செங்கோட்டைக்கே தெரியும் என்று கூறி இருக்கிறார். அவர் தவறுதலாக தனது பெயரை கூறுவதற்கு பதில் அப்படி சொல்லி இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்.

சட்டமன்ற கூட்டத்தொடரில் இந்த ஆட்சி குறித்து நல்ல விதமாக அவர் தான் கூறியுள்ளார். அவர் அந்த கட்சியில் இருப்பதால் தேர்தல் பணியாற்றி வருகிறார். அவருக்கே நன்றாக தெரியும். திமுக ஆட்சிக்கு வந்தால்தான் மாநகராட்சி வளரும் என்றும், நேற்று தோழமைக் கட்சியை சேர்ந்த நிர்வாகிகளை அழைத்து ஒருங்கிணைப்பது எப்படி குறித்து பேசி இருந்தோம்.

அப்போது ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், அமைச்சர் நேரு பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அமைச்சர் நாளை மறு தினம் செயல்வீரர்கள் கூட்டம் வைத்திருக்கிறோமே அதற்கு வரும் தலைவர்களுக்கு முறையான வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்று கேட்டுள்ளார். அதற்கு அமைச்சர் அளித்த பதிலை தவறாக புரிந்து கொண்ட விஷமிகள் சிலர் அமைச்சர் நேரும், இளங்கோவனும் பணம் குறித்து பேசுவதாக சமூக வலைத்தளங்களில் பரப்பி விட்டனர். அதை நான் கூட தான் கேட்டேன்.

இதை வேண்டுமென்றே திட்டமிட்டு மார்பிங் செய்து பரப்பி விட்டு உள்ளனர். எது செய்தாலும் இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் புதிய Pre-Incubation Centre மற்றும் Startup Studio தொடக்கம்

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தின் 'கற்பகம் புத்தாக்கம் மற்றும் இன்குபேஷன் கவுன்சில்' (KIIC), தனது புதிய 'Pre-Incubatio...

2016 ஆனைமலை இளைஞர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை: கோவை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

ஆனைமலை காவல் நிலையத்தில் குற்ற எண் 369/2016-ன் கீழ் பதிவான கொலை வழக்கில், மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பாப்பான் @ சுதானந்தம...

ஜெம் வீரமணி வழக்கு: கோவை காவல் ஆணையர் உள்பட 2 ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் மற்றும் கூடுதல் ஆணையர் அருண் ஆகிய இரு மூத்த ஐபிஎஸ் அதிகா...

கோவை–போத்தனூர் இடையே பராமரிப்பு பணி: செப்.25, 26-ல் இரு மெமு ரயில் சேவையில் மாற்றம்

செப்டம்பர் 25 மற்றும் 26, 2026 ஆகிய தேதிகளில் கோவை-போத்தனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற...

கோவையில் பார் ஊழியரை கத்தியால் மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது

கோவை புலியகுளம் ரோடு பங்கஜாமில் ரோடு பகுதியில் உள்ள சன்ரிச் 11 - 11 பாரில் ஊழியர் பாண்டியராஜனிடம் இலவச மதுபானம் கேட்டு ம...

கோவை தடாகம் சாலையில் ஆம்புலன்ஸ் பணிமனையில் தீ விபத்து

கோவை தடாகம் சாலையில் உள்ள கோயில்மேடு அருகே ஆம்புலன்ஸ் பணிமனையில் திடீரென தீ பரவியது. இதனால் கரும்புகை மேகங்களாக சுற்றுவட...