வால்பாறையில் சுற்றுலாப் பயணிகளை விரட்டிய காட்டு யானைகள் - ஆபத்தை உணராமல் போட்டோ எடுத்ததால் விபரீதம்!

கோவை மாவட்டம் வால்பாறையில் கோயில் அருகே வந்து நின்ற காட்டு யானைக் கூட்டத்தை சுற்றுலாப் பயணிகள் புகைப்படம் எடுத்தனர். ஆபத்தை உணராமல் செய்த செயலால் காட்டு யானைகள் சுற்றுலாப் பயணிகளை விரட்டியதால் அங்கு பதற்றம் நிலவியது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. யானை சிறுத்தை காட்டெருமை, கரடி போன்ற வனவிலங்குகள் மனிதர்களை அச்சுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் வால்பாறை அருகே புதுதோட்டம் பொள்ளாச்சி சாலையில் காளியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி கும்பிட்டு வந்தனர்.

இந்த நிலையில், வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 25 காட்டு யானைகள் தேயிலைத் தோட்டத்தில் முகாமிட்டதால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் யானைகளை பார்த்து புகைப்படம் எடுத்து சத்தமிட்டுக்கொண்டிருந்தன.

மனித வனவிலங்கு மோதல் தடுப்பு குழுவினர் யானை அருகில் சுற்றுலா பயணிகளை செல்ல விடாமல் தடுத்து நின்று பாதுகாப்பு பணியில் இருந்தனர். இருப்பினும், காட்டு யானைகளின் கூட்டத்திலிருந்து நான்கு யானைகள் பிரிந்து மக்கள் நிற்கும் கோவில் பகுதிக்கு வேகமாக வந்தது.



வனத்துறையினர் யானைகளை விரட்டியும் யானை செல்லாமல் கோயில் அருகே வந்து நின்று நேற்று மதியம் அன்னதானமிட்ட சாப்பாடு கழிவுகளை தேயிலை தோட்டத்தில் கொட்டி இருந்தனர். அதை சாப்பிட்டும் அங்கு வாழை மரம் போன்றவை இருந்ததால் அதை சாப்பிட்டும் காட்டு யானை சிறிது நேரம் நின்றது. வனத்துறையினர் யானைகளை விரட்டியும் செல்லாமல் நின்று கொண்டிருந்தது. இதைப்பார்த்த சுற்றுலா பயணிகளும் கோவிலுக்கு வந்த பக்தர்களும் புகைப்படம் எடுத்து ஆரவாரம் செய்தனர்.



சிறிது நேரத்தில் தேயிலை தோட்டத்தில் இருந்து காட்டு யானைகளை வனப்பகுதிக்கு விரட்ட வனத்துறையினர் முயற்சித்தனர். அப்போது, யானை செல்லும் பாதையிலேயே சுற்றுலா பயணிகள் சென்று புகைப்படம் எடுத்தனர்.



இதனால், கூட்டத்தில் இருந்த ஒரு காட்டு யானை அவர்களை துரத்தி சாலைவரை விரட்டி வந்தது. இதில், அவர்கள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். சிறிது நேரம் அப்பகுதியில் முகாமிட்டிருந்த காட்டு யானை பின்னர் வனப்பகுதிக்கு திரும்பச் சென்றது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



ஆபத்தை உணராமல் யானை அருகில் சென்று புகைப்படம் எடுத்து வரும் சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் கண்டிக்க வேண்டும் என்று வன விலங்கு ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும், வனத்துறையினர் மனித விலங்கு மோதலை தடுப்பதற்கு, பணியில் இருக்கும்பொழுது அவர்களுக்கு தேவையான உபகரணங்களை வழங்கவும், யூனிபார்ம் மற்றும் விசில், அடையாள அட்டை போன்றவை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினர்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...