தமிழர்களை வடமாநிலத்தவர்கள் தாக்கியதாக பரவும் செய்தி பொய்யானது..! - திருப்பூர் போலீசார் விளக்கம்!

திருப்பூர் அடுத்த வேலம்பாளையத்தில் தமிழர்களை வடமாநிலத்தவர்கள் தாக்கியதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்தி உண்மைக்கு புறம்பானது என திருப்பூர் மாநகர காவல்துறை சார்பில் விளக்கமளித்து அறிக்கை.


திருப்பூர்: திருப்பூரில் சமீபத்தில் வடமாநில இளைஞர்கள் சிலர் தமிழர்களை தாக்கியதாக சமூக வலைத்தளங்களில் பரவிய செய்தி உண்மைக்கு மாறானது என திருப்பூர் மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாநகர காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையில், திருப்பூர்‌ வடக்கு மாவட்டம்‌, வேலம்பாளையம்‌ காவல்‌ நிலைய சரக எல்லைக்குட்பட்ட திலகர்‌ நகரில்‌ ரியா பேஷன்ஸ் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனத்தில் பணியாற்றி வரும் நபர் ஒருவர் ‌கடந்த 14.01.2023 அன்று மாலை நேர தேநீர்‌ இடைவேளையின்‌ போது அருகில்‌ உள்ள டீ கடைக்கு டீ குடிக்க சென்றுள்ளார். அப்போது அந்த டீ கடையில், இருவர் அமர்ந்திருந்துள்ளனர்.

இந்நிலையில், சிகரெட் புகை பட்டதில் அந்த மூவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, ரியா பேஷன்ஸ் நிறுவனத்தில் வேலை செய்யும் நபர், தனது, நண்பர்களை அழைத்து வந்ததால் இரு தரப்பினர்களுக்கும்‌ இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இறுதியாக அனைவரும் கலைந்து சென்ற நிலையில், யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என விசாரணையில் தெரியவந்துள்ளது. இது சம்பந்தமாக யாரும்‌ காவல் நிலையத்தில்‌ புகார்‌ அளிக்கவில்லை.

இந்த பிரச்சினையானது, தொழில்‌ போட்டியோ, வேலைவாய்ப்பு சம்பந்தமாகவோ அல்லது எந்தவித முன்விரோதம்‌ காரணமாகவோ ஏற்படவில்லை என்றும்‌ தற்செயலாக இரண்டு நபர்‌ மற்றும்‌ அவர்களது நண்பர்களுக்குள்‌ ஏற்பட்ட பிரச்சனையே என்று தெரியவருகிறது.

இருப்பினும்‌ இது சம்பந்தமாக முழுமையாக விசாரணை செய்து சம்பந்தப்பட்டவர்கள்‌ மீது நடவடிக்கை எடுக்கப்படும்‌. 14.01.2023 அன்று நடந்து முடிந்த மேற்கண்ட நிகழ்வை 26.01.2023 அன்று நடைபெற்றதாகவும்‌, பனியன்‌ கம்பெனியில்‌ வேலை செய்யும்‌ தமிழர்களை வடஇந்தியர்கள்‌ விரட்டுவதாக சமூக வலைதளங்களில்‌ தவறாக பகிரப்பட்டு வருகிறது.

இவ்வாறு திருப்பூர் மாநகர காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...