தைப்பூச திருவிழா- கோவை, திண்டுக்கல் இடையே சிறப்பு ரயில் இயக்கம்

ததைப்பூச விழாவை முன்னிட்டு கோவை- திண்டுக்கல் இடையே வரும் 27,28,29 மற்றும் பிப்ரவரி 4,5,6 ஆம் தேதிகளில் முன்பதிவு இல்லா சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று அறிவிப்பு.


கோவை: தைப்பூசத்தை முன்னிட்டு கோவை-திண்டுக்கல் இடையே 6 நாட்கள் சிறப்பு ரயிலை இயக்க உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

திண்டுக்கல்-கோவை அகல ரயில் பாதை பணிகள் நிறைவு பெற்றுக் கடந்த 2015இல் இருந்து ரயில் போக்குவரத்து தொடங்கியுள்ளது. இதில் பயணிகள் வசதிக்காக சீசன் சமயங்களில் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது.

பலகட்ட போராட்டத்திற்குப் பின் பொங்கல் பண்டிகைக்காகக் கோவை-திண்டுக்கல் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட்டது பயணிகளிடையே வரவேற்பு கிடைத்தது. இதைத்தொடர்ந்து தைப்பூச விழா பொள்ளாச்சி, உடுமலை பகுதியில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

விழாவை முன்னிட்டு பழனிக்குப் பாதயாத்திரையாக ஆயிரக்கணக்காகப் பக்தர்கள் செல்கின்றனர். இவ்வாறு செல்பவர்கள் சொந்த ஊருக்குப் பேருந்துகளில் திரும்புகின்றனர். அப்போது உடுமலை, பொள்ளாச்சி, கோமங்கலம் மற்றும் கேரள மாநிலம் பாலக்காடு உட்பட்ட பகுதியிலிருந்து வரும் பக்தர்கள் போதிய பேருந்து வசதி இல்லாமல் பாதிக்கப்படுகின்றனர்.

பழனியிலிருந்து இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகள் மடத்துக்குளம், உடுமலைப்பேட்டை கோமங்கலம் போன்ற இடங்களில் நிற்பதில்லை. இதனால் பொங்கலுக்கு விடப்பட்ட சிறப்பு ரயில் தைப்பூசம் வரை நீட்டிக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்தது. கோரிக்கையை ஏற்ற தென்னக ரயில்வே கோவை-திண்டுக்கல் இடையே 6நாட்கள் சிறப்பு ரயில் இயங்கும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில், தைப்பூசத்தை முன்னிட்டு, வரும் 27,28,29 மற்றும் பிப்ரவரி 4,5,6 ஆம் தேதிகளில் இந்த முன்பதிவு இல்லா சிறப்பு ரயில் கோவை- திண்டுக்கல் இடையே இயக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. இது பயணிகள் மற்றும் பக்தர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

Newsletter

கோவை அதிமுக வேட்பாளர்கள் அண்ணாமலையுடன் சந்திப்பு; வெற்றிக்கு வாழ்த்து தெரிவிப்பு

சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் தொகுதி அதிமுக வேட்பா...

கோவை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

கோவையில் திமுக வேட்பாளர் அறிமுக பிரச்சாரத்தில் பங்கேற்க வந்த முதலமைச்சர் ஸ்டாலினை விமான நிலையத்தில் கட்சித் தலைவர்களும்...

முதலமைச்சர் இன்று கோவைக்கு வருகை; செந்தில் பாலாஜி ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்

தமிழக முதலமைச்சர் M.K. Stalin இன்று கோவையில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகிறார். Avinashi சாலையில்...

பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கம்

சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம், ஏப்ரல் 1 முதல் மே 31 வரை பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக புதன், வியாழன், வெ...

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...