கோவை இடையர் வீதியில் மாநகராட்சி ஆணையர் பிரதாப் திடீர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட இடையர் வீதியில் மாநகாரட்சி ஆணையர் பிரதாப் திடீர் ஆய்வு நடத்தினார். அங்குள்ள தெருக்களில் சிசிடிவிகளைப் பொறுத்தி கண்காணிப்பை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு அவர் ஆணையிட்டார்.


கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் மாநகராட்சி ஆணையர் பிரதாப் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.



அப்போது, 81வது வார்டுக்கு உட்பட்ட இடையர் வீதி, உப்பர் வீதி பகுதிகளில் சாலை ஓரத்தில் பயன்பாடற்று கிடந்த தண்ணீர் தொட்டியை உடனடியாக அகற்ற அவர் உத்தரவிட்டார்.

மேலும், சாலையோரங்களில் போடப்பட்டிருந்த குப்பைகளை அகற்ற அறிவுறுத்திய ஆணையர் பிரதாப், குப்பைத் தொட்டிகளை தவிர வேறு எங்கும் குப்பைகளைக் கொட்டாமல் இருக்க வேண்டும் என பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.

அதேபோல், பொதுமக்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க, தெருக்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி கண்காணிக்கவும் அப்போது அவர் உத்தரவிட்டார்.



இதனை தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள கடைகளுக்கு நேரில் சென்ற ஆணையர், அங்கு வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்களின் தரம் மற்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு நடத்தினார்.

இந்த ஆய்வின்போது, மாமன்ற உறுப்பினர் மனோகரன், உதவி செயற்பொறியாளர் புவனேஸ்வரி, மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன், உதவி பொறியாளர் விமல் ராஜ் சுகாதார ஆய்வாளர் தனபால் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...