கோவையில் சசிகலாவிக்கு எதிராக பேட்டி கொடுத்தவரை விரட்டியடித்த அ.தி.மு.க.வினர்.


கோவையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் காலை முதலே அக்கட்சி தொண்டர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அப்போது, அங்கு இருந்த அ.தி.மு.க. உறுப்பினர் அருண் என்பவர், சசிகலாவுக்கு எதிராக பத்திரிக்கையாளர்களிடம் பேட்டியளித்தார். மேலும், காலம் தாழ்த்தி வழங்கப்பட்டாலும்  இது சரியான தீர்ப்பு என்று கூறினார். 



அருண் பேட்டி கொடுப்பதை கேட்ட அ.தி.மு.க தொண்டர்கள் அவரை இதய தெய்வம் மாளிகையை விட்டு விரட்டியடித்தனர். வெளியேற்றப்பட்ட அருண் மீண்டும் செய்தியாளர்களிடம் பேசினார். 



அப்போது அவர் கூறுகையில், 'அடிமட்டத்தொண்டன் தான் அ.தி.மு.க வின் பலம். தங்கள் கருத்துக்களை கூற எல்லோருக்கும் உரிமை உள்ளது. அதன்படி தான் எனது கருத்தை கூறினேன். ஆனால், என்னை விரட்டியடித்தனர். எங்கள் கட்சியில் புல்லுருவிகள் பலர் உள்ளனர். 

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...