ஜிஎஸ்டி வரி உயர்வால் பம்பு மின்மோட்டார் தொழில் பாதிப்பு - தொழிலாளர்களுக்கு கட்டாய விடுப்பு!

கோவையில் பம்பு மின் மோட்டார் தயாரிப்பு தொழில் ஜிஎஸ்டி வரி உயர்வால் தொழில் வீழ்ச்சியடைந்துள்ளதால் தொழிலாளர்களுக்குக் கட்டாய விடுப்பு அளிப்பு.



கோவை: கோவையில் பம்பு மின்மோட்டர் தயாரிக்கும் உதிரிப்பாகங்களின் விலை உயர்ந்ததால் உற்பத்தித் திறன் சரிந்துள்ளது.

உலக அளவில் பம்பு மின் மோட்டார் தயாரிப்பில் கொடிகட்டிப் பறக்கும் நகரம் கோயமுத்தூர். நாட்டின் முதல் பம்ப் தயாரித்த பெருமை கோயமுத்தூர் தொழில் நகரத்தைச் சாரும் . இந்தியாவில் பசுமைப் புரட்சிக்குப் பக்க பலமாக இருந்தது கோயமுத்தூரும், அதன் பம்பு மின் மோட்டார் தயாரிப்புகளும் என்றால் அது மிகையல்ல. நாட்டில் உற்பத்தியாகின்ற மின் மோட்டடார் பம்புகளில் இந்திய அளவில் கோயமுத்தூர் தொழில் நகரமே முதலிடம்.

நாட்டில் உற்பத்தியாகின்ற பம்புகளில் கிட்டத்தட்ட 55% பம்புகள் கோயமுத்தூரில் தயாரித்து சந்தை படுத்தப்படுகின்றன. அப்படிப்பட்ட கோயமுத்தூர் தனது பெருமையைத் தக்கவைத்துக்கொள்ளுமா? என்ற கேள்வி எழுத்திருக்கின்றன.

ஜிஎஸ்டி அறிமுகமான காலகட்டத்திலிருந்தே சிறு, குறு தொழில்களில் பெரும்பாலானவை நெருக்கடிக்குத் தள்ளப்பட்டன. இந்த நிலையில் ஜிஎஸ்டி ரிவைஸ் 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடந்தன. அப்போது பம்ப் மின் மோட்டார்களுக்கான ஜிஎஸ்டி 12% லிருந்து 18% உயர்ந்தது. இந்த நிலையில் மூலப்பொருட்களின் விலையும் விண்ணைத் தொட்டன. இதனால் மீண்டும் ஜிஎஸ்டி வரி உயர்வு பம்பு மின் மோட்டார் தொழிலை ஆட்டம் காணச் செய்திருக்கின்றது.

இதனால் முறையாக ஜிஎஸ்டி ஃபாலோ செய்து பம்பு மின் மோட்டார்களை தயாரிக்கும் நிறுவனத்தாரின் உற்பத்தி செலவு அதிகரித்திருக்கின்றன. இதனால் பம்ப் விலை கணிசமாக உயர்ந்திருக்கின்றன. இதனால் குறைந்த விலையில் தர மற்ற பம்புகள் மின் மோட்டார்கள் கள்ள சந்தையில் உலா வர ஆரம்பித்திருக்கின்றன.

குறிப்பாக பில் இன்றி சட்டவிரோதமாகத் தரமற்ற பம்புகள் விற்பனைக்கு வந்திருக்கின்றன. அன் ஆர்கனைஸ்டு செக்டாரில் தயாரிக்கப்படுகின்ற பம்ப் மின் மோட்டார்களுக்கு ஜிஎஸ்டி செலுத்துவது இல்லை. இதனால் முறையாக ஜிஎஸ்டி வரி கட்டி தொழில் செய்கின்ற பலரது தொழில் படுத்துவிட்டது.

சந்தையில் கோயமுத்தூர் மின் மோட்டார், விரும்பி வாங்கப்படுகின்றன. இதற்கு முக்கிய காரணம் கோயமுத்தூரின் பம்பு மின் மோட்டார்களின் அடங்கியிருக்கின்ற தரம் நீடித்து உழைக்கும் திறன். நல்ல தரமான பம்புகள் மார்க்கெட்டில் இருந்தும் நுகர்வோர் தன்மை குறைந்திருக்கின்றன. கடந்த வருடம் மூலப்பொருட்களின் விலை ஏற்றத்தால் 30% பம்ப் மின் மோட்டார் விற்பனை சரிந்திருந்த நிலையில், ஜிஎஸ்டி உயர்வால் நடப்பாண்டில் பம்பின் விற்பனை 70 % குறைந்திருக்கின்றன. இது வரலாற்றில் இல்லாத சரிவாக பார்க்கப்படுகின்றன.

தொடர் மழை மற்றும் விவசாய விளை பொருட்களின் விலை நிலையின்றி இருப்பது ஒரிஜினல் மின் மோட்டார் பம்ப் நுகர்வு தன்மையைக் குறைத்திருக்கின்றன. குறிப்பாகத் தொடர் மழையின் காரணமாக மின் மோட்டார் பயன்பாடு கணிசமாகக் குறைந்திருக்கின்றன. தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட விளை பொருட்களின் விலை கடும் சரிவில் இருக்கின்றன. இதனால் நஷ்டமடைகின்ற விவசாயிகள் விவசாயத்துக்கு பெரும் செலவைச் செய்ய முன்வரவில்லை.

சந்தை மந்தத்தினால் பம்ப் மின் மோட்டார் தயாரிப்பாளர்கள் கடும் நஷ்டத்துக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன. ஆர்டர்களும் குறைந்திருப்பதனால் உற்பத்தி திறன் குறைந்திருக்கின்றன. இந்த நிலையில் தொழிலாளர்களுக்கான வேலை வாய்ப்பும் குறைந்திருக்கின்றன. குறிப்பாக வாரத்தில் மூன்று நாட்களுக்கு விடுப்பு, ஒரு நாளைக்கு ஒரு ஷிஃப்ட் என்று தொழிலாளர்களின் வேலை வாய்ப்பு தற்போது மந்தமாகியிருக்கின்றன.

பம்பு மின் மோட்டார் தொழில் ஈடுபடுகின்ற தொழிலாளர்கள் மற்றும் பம்பு மின் மோட்டார் உற்பத்திக்கான ஜாப் வொர்க் தொழில்களும் நெருக்கடியில் தத்தளிக்கின்றன. குறிப்பாகக் கடன் பெற்று தொழிலை நடத்தும் நிறுவனங்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளன. இதனால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு பாட்டாளிகளின் வாழ்வாதாரம் பரிதவிக்கின்றன.

இது குறித்த பேசிய சீமா தலைவர் விக்னேஷ், பம்பு செட் மின் மோட்டார் தொழிலைக் காக்க மத்திய அரசாங்கமும், மாநில அரசாங்கமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனத் தெரிவித்திருக்கின்றார். அதாவது கடும் நெருக்கடிக்கு உள்ளான தொழிலை மீட்கும் விதமாக ஜிஎஸ்டி முன் இருந்ததை போல 12% வரியாக வசூலிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதே போன்று மூலப் பொருட்கள் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுத்து தொழில் நிறுவனங்களுக்கு 4-5 மாதத்துக்கு நிலையான விலையில் மூலப்பொருட்கள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். இது மட்டுமின்றி மூலப்பொருட்களுக்கான கிடங்கு கோயமுத்தூரில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே பம்ப் மின் மோட்டார் தயாரிக்கும் தொழில் நிறுவனங்களை நெருக்கடியிலிருந்து மீட்க வரி குறைப்பு மூலப்பொருள் விலை குறைப்பு மூலப்பொருள் கிடங்கு அமைப்பு உள்ளிட்டவற்றைச் செய்ய வேண்டும் என்பதே தொழில் துறையினரின் பிரதானமான கோரிக்கையாக உள்ளது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...