உடுமலையில் அன்னாசிப் பழம் விற்பனை அமோகம்

கேரளாவில் அன்னாசிப் பழ உற்பத்தி அதிகரித்துள்ளதால் உடுமலை உள்ளிட்ட பகுதிகளில் பழங்கள் விற்பனைக்காக அதிகளவு குவிந்துள்ளன.


திருப்பூர்: அன்னாசிப் பழ சீசன் தொடங்கியுள்ளதால், உடுமலைப் பகுதியில் விற்பனை களைக்கட்டியுள்ளது. மக்கள் ஆர்வமுடன் அன்னாசிப் பழங்களை வாங்கி செல்கின்றனர்.

கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் அன்னாசிப் பழ விவசாயம் அதிகளவு நடைபெறுகிறது. அங்குள்ள வாழக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மட்டும் பல ஆயிரம் ஏக்கரில் அன்னாசிப் பழ சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

அப்பகுதியில் விளையும் கன்னராக்க என்ற ரகத்துக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது. எனவே இந்த ரகம் வாழக்குளம் பகுதியிலிருந்து பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.



பிற ரக அன்னாசியும் பரவலாக உற்பத்தியாகிறது. நடப்பாண்டு உற்பத்தி வழக்கத்தை விட அதிகரித்துள்ளதால் விலை சரிவைத் தவிக்கத் தமிழக -கேரளா எல்லைப் பகுதியில் அன்னாசிப் பழங்களைக் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.



அவ்வகையில், உடுமலை பகுதிக்கு மூணாறு வழியாக அன்னாசிப் பழங்கள் கொண்டு வரப்பட்டுத் தரத்தின் அடிப்படையில் பழம் ரூ.30 முதல் விற்பனை செய்யப்படுகிறது நாள்தோறும் 5 லோடு அளவுக்கு அன்னாசி கொண்டு வரப்படுகிறது.

அன்னாசிப் பழ சீசனை யொட்டி இப்பகுதியில் விற்பனை அதிகளவு இருக்கும். எனவே அதைத் திட்டமிட்டு பழங்களைக் கொண்டு வந்து விற்பனை செய்கிறோம் என வியாபாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

Newsletter

கவுண்டம்பாளையம் தொகுதி தேவைகளுக்காக சட்டமன்றத்தில் குரல் கொடுப்பேன் - எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ்

கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ், பதவியேற்புக்க...

கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் M Sivaguru Prabhakaran கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை நேரில் ஆய்வு செய்தார். மாணவர்க...

பொது போக்குவரத்து வாகனங்களில் GPS மற்றும் Emergency பொத்தான் பொருத்த உச்ச நீதிமன்றம் கட்டாய உத்தரவு

பயணியர் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்து வாகனங்களில் GPS கருவி மற்றும் Emergency பொத்தான் க...

“மே கார்னிவல் 2026” ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரியில் தொடக்கம்..!

“ஆரோக்கியமான பற்கள், ஆரோக்கியமான வாழ்க்கை” என்ற கருப்பொருளில், பொதுமக்களிடையே வாய்நல விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில...

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...