கேரளாவுக்கு போதைப் பொருள் கடத்திய கும்பல் கைது - போலீசாரை நேரில் அழைத்து பாராட்டிய கோவை சரக டிஐஜி!

நீலகிரி வழியாக கேரளாவுக்கு கடத்தப்பட இருந்த ரூ.40 லட்சம் மதிப்பிலான குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை பிடிக்க உதவிய தலைமை காவலர் மகேஷை கோவை சரக டிஐஜி விஜயகுமார், நேரில் அழைத்து பாராட்டினார்.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் மசினகுடி காவல் நிலைய தலைமை காவலர் மகேஷ். இவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரிவில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கூடலூர் வழியாக தமிழக பதிவெண் கொண்ட லாரியில், பிஸ்கட் பாக்கெட்டுகளுக்கு இடையே தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தி வரப்படுவதாக காவலர் மகேஷ்-க்கு தகவல் கிடைத்துள்ளது.

இதுகுறித்து அவர், கூடலூர் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து போலீசார், தொரப்பள்ளி சோதனை சாவடியில் குறிப்பிட்ட லாரியை மடக்கி பிடித்து சோதனை செய்தனர்.



இந்த சோதனையில் அந்த லாரியில் கேரளாவுக்கு கடத்தப்பட இருந்த 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில், கேரளாவுக்கு கடத்தப்பட இருந்த 40 லட்சம் மதிப்பிலான குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை பிடிக்க உதவிய காவலர் மகேஷை கோவை சரக டிஐஜி விஜயகுமார், நேரில் அழைத்து சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...