கோவை சுந்தராபுரத்தில் மூதாட்டியிடம் நூதன முறையில் செயின் திருட்டு!

கோவை சுந்தராபுரத்தில் பிரதமர் மோடி ஓய்வூதிய திட்டத்தில் சேர்த்துவிடுவதாகக் கூறி மூதாட்டியிடம் 4 சவரன் தங்க சங்கிலியைத் திருடிச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவை மதுக்கரை போடிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நஞ்சம்மாள்(77). இவர் கடந்த 30 ஆண்டுகளாக அதேபகுதியில் மளிகைக் கடை வைத்து நடத்தி வருகிறார்.

இந்நிலையில் நேற்று நஞ்சம்மாள் கடைக்குத் தேவையான பொருட்களை வாங்க உக்கடம் வந்துவிட்டு, மீண்டும் போடிபாளையம் செல்ல உக்கடம் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காகக் காத்திருந்தார்.

அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர் ஒருவர், தானும் போடிபாளையம் செல்வதாகவும், வேண்டுமென்றால் உடன் அழைத்துச் செல்வதாகவும் கூறியுள்ளார்.

இதனை நம்பி இருசக்கர வாகனத்தில் நஞ்சம்மாள் சென்றுள்ளார். அப்போது பொள்ளாச்சி சாலையில் உள்ள சுந்தராபுரம் தனியார் மருத்துவமனை அருகே வந்தபோது, அந்த நபர் இருசக்கர வாகனத்தை திடீரென நிறுத்தியுள்ளார்.

அப்போது பேச்சுக் கொடுத்த அவர், பிரதமர் மோடி ஓய்வூதிய திட்டத்தில் நஞ்சம்மாளை சேர்த்து விடுவதாகவும், இந்த திட்டத்தின் மூலம் மாதந்தோறும் வங்கிக் கணக்கிற்குப் பணம் வரும் எனவும் கூறியுள்ளார்.

மேலும் இந்த திட்டத்தில் சேர புகைப்படம் ஒன்றை எடுக்க வேண்டும் எனும் கூறி, நஞ்சம்மாளை கழுத்தில் அணிந்திருந்த தங்கச் செயினை கழட்டி பேப்பரில் சுற்றி வைத்துக் கொள்ளுமாறு கூறியுள்ளார்.

இதை நம்பிய அவரும், தங்க செயினை கழட்டி பேப்பரில் மடித்து வைத்துள்ளார். பின்னர் தனது செல்போனில் புகைப்படம் எடுத்துக்கொண்ட அந்த நபர், திட்டத்திற்கு விண்ணப்பிக்க பத்திரத்தாள் வாங்கி வருவதாகக் கூறி, நஞ்சம்மாளை அங்கேயே காத்திருக்கச் சொல்லி விட்டுச் சென்றுள்ளார்.

வெகுநேரமாகியும் அந்த நபர் வராததால், பேப்பரை சோதனை செய்தபோது அதிலிருந்த 4சவரன் தங்கசெயின் மாயமானது தெரியவந்தது.

இதையடுத்து நஞ்சம்மாள் போத்தனூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து செயினை திருடிச்சென்ற மர்மநபரைத் தேடி வருகின்றனர்.

Newsletter

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மனைவி கலைச்செல்வி நாம் தமிழர் கட்சியில் இணைவு

வால்பாறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமியின் மனைவி கலைச்செல்வி, அதிமுக சார்பில் சட்டப் பேரவை தேர்தலில் போட்டிய...

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...