நீலகிரி காட்டேரி அருகே காட்டு யானை விரட்டியதால் அலறியடித்து ஓடிய பொதுமக்கள் - பரபரப்பு..!

காட்டேரி அடுத்த பழப்பண்ணை அருகே சாலையை கடக்க முயன்ற காட்டு யானை விரட்டியதால் அச்சமடைந்த பொதுமக்கள் அலறியடித்து ஓடிய நிலையில், வாகன ஓட்டிகள் கவனமாக பயணிக்க வனத்துறை அறிவுறுத்தல்.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக காட்டு யானை கூட்டம் ஒன்று முகாமிட்டுள்ளது. இந்த யானை கூட்டத்தை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட குன்னூர் வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.



இந்த நிலையில் அந்த கூட்டம் வனப் பகுதிக்குள் செல்லாமல் தொடர்ந்து சாலை ஓரங்களிலும் தேயிலை தோட்டங்களிலும் சுற்றி திரிந்து வருகின்றன. குறிப்பாக குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் அடிக்கடி கடந்து சென்று வருகின்றன.



இந்த நிலையில் இன்று காலை யானை கூட்டம் காட்டேரி பழப்பண்ணை அருகே சாலையை கடக்க முயன்ற போது, சாலையில் இருந்த பொதுமக்களை ஆக்ரோஷமாக துரத்தியதால், அச்சமடைந்த பொதுமக்கள், அலறியடித்து ஓடியதால் பரபரப்பான சூழல் நிலவியது. பின்னர் யானைகள் தனது குட்டிகளுடன் வனப்பகுதிக்குள் சென்றன.



இந்த யானை கூட்டம் காட்டேரி, மரப்பாலம், டபுள் போஸ்ட்டு ஆகிய பகுதிகளில் உலா வருவதால் குடியிருப்பு மற்றும் சாலை பகுதிகளுக்கு வராமல் தடுக்கும் வகையில் வனத்துறையினர் ஆறு குழுக்களாக பிரிந்து அவற்றின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

மேலும், பர்லியார் மலைப்பாதையில் வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கையுடன் வாகனங்களை இயக்க வேண்டும் என வனத்துறை சார்பாக அறிவுறுத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...