விழித்திரை மூலம் ரேஷன் பொருட்கள் பெற நடவடிக்கை: முதற்கட்டமாக 35,000 கடைகளில் அமல் - கோவையில் அமைச்சர் சக்கரபாணி

கோவை ராமநாதபுரத்தில் உள்ள ரேஷன் கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சக்கரபாணி, வரும் 9 ஆம் தேதி முதல் முழு கரும்புடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்படும் என்று கூறினார்.


கோவை: கோவை மாவட்டம் ராமநாதபுரம் 80 அடி சாலை பகுதியில் உள்ள நியாய விலை கடையில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.



அப்போது, நியாய விலைக்கடைக்கு வந்துள்ள பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பிற்கான பச்சரிசி, சர்க்கரை மற்றும் கரும்பு உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.



இந்த ஆய்வுக்கு பின் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களிடம் பேசியதாவது, தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை அகதிகள் முகாமில் உள்ள இலங்கை தமிழர்களுக்கும் ரூபாய் ஆயிரம் ரொக்கப் பணமும், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு வழங்குவதற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி வரும் 9ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்புகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் முதல்வர் ஒன்பதாம் தேதி இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறார். அதே நாளில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வருகிறது. அனைவரும் பெற்றுக்கொள்ளலாம். வாங்க முடியாத நபர்கள் வாங்குவதற்காக 14ஆம் தேதி சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் மட்டும் 11 லட்சத்து 255 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். மொத்தம் உள்ள 1,404 நியாய விலை கடைகள் உள்ளது. கோவை மாவட்டத்தில் 100 சதவீத பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் வந்துவிட்டது. விநியோகம் செய்வதற்காக 90 சதவீத கரும்புகள் வந்துள்ளது.

தேர்தல் வாக்குறுதிகளில் சொன்னவற்றை எல்லாம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார். நியாயவிலை கடைகளில் தேங்காய் எண்ணெய் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

பாமக நிறுவனர் ராமதாஸ் 5 அடி கரும்பை வழங்க வேண்டும் என கூறியுள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் மூன்று துண்டு கரும்புகள் வழங்கப்பட்டன. ஆனால் தற்போது ஒரு முழு கரும்பு வழங்கப்பட உள்ளது.

நியாய விலைக் கடைகளில் கைரேகை வைப்பதில் உள்ள பல்வேறு சிரமங்களை போக்கும் விதமாக கண் விழித்திரை மூலம் நியாய விலை கடைகளில் பொருட்களை வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 35 ஆயிரம் கடைகளில் சோதனை முறையில் கொண்டு வரப்பட உள்ள இந்த திட்டம், பின்னர் தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...

கோவையில் ரூ.86 லட்சத்தில் 43 மின்கல வாகனங்கள் மற்றும் தெரு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் பவ...

கூடலூர் நகராட்சியில் 27 வார்டுகளிலும் தீவிர டெங்கு கொசு ஒழிப்புப் பணி

கோவை கூடலூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க கொசு மற்றும் கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் தீவி...

கோவையில் வீட்டில் நகை பணம் இல்லாததால் பொருட்களை உடைத்துவிட்டு தப்பிய திருடன்

கோவை ராமநாதபுரத்தில் ஐ.டி நிறுவன ஊழியர் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் திருடச் சென்ற ஆசாமி, நகை பணம் எதுவும் கிடைக்காததால் ஆத்...

கோவை அசோகபுரம் ஆசிரியர் காலனி ரவுண்டானாவில் 6 அடி உயர வெண்கல திருவள்ளுவர் சிலை திறப்பு

கோவை அசோகபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் முடிவில் உள்ள ஆசிரியர் காலனி ரவுண்டானாவில், தனி...