கோவை கணுவாய் சாலையில் துரத்திய யானை.. அலறியடித்து ஓடிய மக்கள்! - வைரலாகும் வீடியோ

கோவை மாவட்டம் கணுவாய் பகுதியில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த ஒற்றை யானை, இன்று காலை சாலையில் சென்ற பொதுமக்களை துரத்தியதால் அவர்கள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.



கோவை: கோவை மாவட்டம் பெரியதடாகம் வனப்பகுதியில் தற்போது 15க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.



இந்நிலையில் நேற்று இரவு மருதமலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை ஆண் காட்டு யானை வடவள்ளி கணுவாய் சாலையில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. பின்னர் தனியார் திருமண மண்டபம் அருகே உள்ள தண்ணீர் தொட்டியில் தண்ணீர் குடித்து விட்டு அருகில் உள்ள வாழை தோட்டத்திற்குள் சென்றது.



இது குறித்து வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்ததைத் தொடர்ந்து, அங்கு வந்த வனத்துறையினர் யானையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர். அங்கிருந்த சிலர் தண்ணீர் குடிக்கும் யானையை வீடியோவாக எடுத்து பதிவிட்டனர்.



இந்நிலையில் இன்று காலை கணுவாய் மெயின் ரோட்டில் அந்த ஒற்றைக் காட்டு யானை சாலையில் வந்தது. அப்போது அந்த யானை பொதுமக்களை துரத்தியதால் அவர்கள் பயத்தில் சிதறி ஓடினர்.

பின்னர் இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது யானை சாலையில் சுற்றி திரியும் அந்த வீடியோ காட்சிகள் பரவி வருகிறது.

Newsletter

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...