சுபஸ்ரீ மரணம் தொடர்பாக விசாரிக்க விசாரணை குழு அமைக்க வேண்டும் - கோவையில் பி.ஆர்.நடராஜன் எம்.பி.

சுபஸ்ரீ மரணம் குறித்து உரிய விசாரணை நடத்த வலியுறுத்தி கோவையில் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் மார்க்சிய, அம்பேத்கரிய, பெரியாரிய அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு கடந்த டிசம்பர் மாதம் பயிற்சிக்காக வந்த திருப்பூர் மாவட்டத்தை சார்ந்த சுபஸ்ரீ என்ற பெண் அங்கிருந்து வெளியேறி மாயமான நிலையில், நேற்று இருட்டு பள்ளம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.

இது குறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த சுபஸ்ரீ யின் கணவர் பழனிக்குமார் இறந்து கிடப்பது சுபஸ்ரீ தான் என்பதை உறுதி செய்தார். இதனை அடுத்து சுபஸ்ரீ யின் உடலானது கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டது.



இந்நிலையில் சுபஸ்ரீயின் மரணம் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் எனக் கூறி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிய, அம்பேத்கரிய, பெரியாரிய அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சுபஸ்ரீயின் மரணம் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் எனக்கூறி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.



இந்த ஆர்ப்பாட்டத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜன் செய்தியாளர்களிடம் பேசியதாவது, சுபஸ்ரீயின் உடல் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட நிலையில் உடனடியாக பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆனால் அவர்களது குடும்ப வழக்கத்திற்கு மாறாக சுபஸ்ரீ என் உடல் எரியூட்டப்பட்டது. இது கோவை மக்களிடையே மிக பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஈஷாவில் தொடர்ந்து இதுபோன்று மர்ம மரணங்கள் நடைபெற்று வருகிறது.

எனவே தமிழக அரசு இது குறித்து ஈஷாவை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். சுபஸ்ரீயின் மரணம் குறித்து விசாரிக்க மாநில அரசு விசாரணை குழுவை அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...