கோவையில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மேயர் கல்பனாவிடம் பொதுமக்கள் 43 பேர் கோரிக்கை மனுக்களை அளித்தனர்

கோவை மாநகராட்சியின் பிரதான அலுவலகத்தில்‌ நடைபெற்ற மக்கள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட மேயர் கல்பனா, மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


கோவை: கோவை மாநகராட்சியின் பிரதான அலுவலகத்தில்‌ மக்கள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்‌ மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ தலைமையில்‌ இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில்‌ மரியாதைக்குரிய துணை மேயா்‌ ரா.வெற்றிசெல்வன்‌, துணை ஆணையாளர்‌ மரு.மோ.ஷர்மிளா ஆகியோர்‌ முன்னிலை வகித்தனர்.



இக்கூட்டத்தில்‌ மாநகராட்சியின்‌ அனைத்து பகுதிகளைச்‌ சேர்ந்த பொதுமக்கள்‌ 47 நபர்கள்‌ மேயரிடம் தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்‌.



இதில்‌ பொதுமக்கள்‌ பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள்‌, சாலை வசதி, மின்விளக்குகள்‌, குடிநா வசதி, பாதாள சாக்கடை, தொழில்வரி, சொத்துவரி, காலியிடவரி, புதிய குடிநா்‌ இணைப்பு, பெயர்‌ மாற்றம்‌, மருத்துவம்‌, சுகாதாரம்‌, கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள்‌ குறித்த பல்வேறு கோரிக்கைகள்‌ அடங்கிய மனுக்கள்‌ பெறப்பட்டன.

இவற்றில்‌ கிழக்கு மண்டலத்தில்‌ 10 மனுக்களும்‌, மேற்கு மண்டலத்தில்‌ 8 மனுக்களும்‌, வடக்கு மண்டலத்தில்‌ 10 மனுக்களும்‌, தெற்கு மண்டலத்தில்‌ 4 மனுக்களும்‌, மத்திய மண்டலத்தில்‌ 10 மனுக்களும்‌, பிரதான அலுவலகத்தில்‌ 5 மனுக்களும்‌ ஆகமொத்தம்‌ 47 மனுக்களை பொதுமக்கள்‌ அளித்தனர்‌.

இக்கோரிக்கை மனுக்களைப்‌ பெற்றுக்கொண்ட மாண்புமிகு மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌, இம்மனுக்களின்‌ மீது உடனடியாக தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட மண்டல உதவி ஆணையாளர்கள்‌, பொறியாளர்கள்‌ மற்றும்‌ அலுவலா்களுக்கு உத்தரவிட்டார்.



இக்கூட்டத்தில்‌, மண்டல உதவி ஆணையார்கள்‌ அண்ணாதுரை, மோகனசுந்தரி, சேகா்‌, முத்து ராமலிங்கம்‌, மகேஷ்கனகராஜ்‌ (பொ), உதவி ஆணையர் (வருவாய்‌) செந்தில்குமார் ரத்தினம்‌, உதவி ஆணையர்‌ (கணக்கு) சுந்தர்ராஜ்‌, உதவி செயற்பொறியாளார்கள்‌, உதவி நகரமைப்பு அலுவலர்கள்‌, உதவி பொறியாளர்கள்‌, மாநகராட்சி அனைத்து அலுவலர்கள்‌ மற்றும்‌ பொதுமக்கள்‌ கலந்து கொண்டனர்.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...