பொள்ளாச்சி அருகே வெளிநாட்டு குதிரைகளை பராமரித்து தருவதாக கூறி ரூ. 2.5 கோடி மோசடி - தந்தை, இரு மகன்கள் கைது

பொள்ளாச்சி அருகே ஊஞ்சவேலம்பட்டியை சேர்ந்த ஹரிவராசன், அவரது அண்ணன் அரவிந்த் கிருஷ்ணன் மற்றும் தந்தை சீனிவாசன் ஆகியோர், வெளிநாட்டு குதிரைகளை பராமரித்து கொடுப்பதாக கூறி மோசடியில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டனர்.



கோவை: கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் சித்தலஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் ஜெயா நாயர் (47). துபாயில் வசித்து வரும் இவர், குஜராத் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பண்ணை அமைத்து வெளிநாட்டு அரேபிய குதிரைகளை விற்பனை செய்து வருகிறார்.

இந்த நிலையில், பொள்ளாச்சி அருகே உள்ள ஊஞ்சவேலம்பட்டியை சேர்ந்த ஹரிவராசன் (26) என்பவர் முகநூல் மூலம் ஜெயா நாயரின் கணவரை தொடர்புக் கொண்டு, பொள்ளாச்சி பகுதியில் குதிரைப் பண்ணை வைத்து இருப்பதாகவும், பண்ணைக்கு வெளிநாட்டு குதிரைகளை கொடுத்தால் பராமரித்து விற்பனைக்கு தயார் செய்து கொடுப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும், பண்ணையை நடத்த தன்னுடைய அண்ணன் அரவிந்த கிருஷ்ணன் (30) மற்றும் தந்தை சீனிவாசன் (58) ஆகியோர் உதவியாக இருப்பதாகவும் கூறியுள்ளார். இதனை நம்பி, ஜெயா நாயர் மற்றும் அவரது கணவனும், 15 வெளிநாட்டு குதிரைகளை பராமரிக்க, ஹரிவராசனுடன் ஒப்பந்தம் செய்துகொண்டனர்.

ஒப்பந்தத்தின்படி, குதிரைகளை பராமரிக்க தீவனம் உள்ளிட்ட செலவுகளுக்காக மாதந்தோறும் ரூ.3 லட்சத்தை ஜெயா நாயர், ஹரிவராசனுக்கு அனுப்பி வந்துள்ளார்.

இந்த நிலையில், கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள ஜெயா நாயரின் பண்ணைக்கு, ஒருவர் குதிரையை விற்பனை செய்வதாக தகவல் வந்துள்ளது. அந்த நபர் குறித்து விசாரித்தபோது அது பொள்ளாச்சி ஹரிவராசன் தான் என்பதை ஜெயா நாயர் தெரிந்துக் கொண்டார்.

பராமரிப்பதாக கூறி, தங்களிடம் குதிரைகளை வாங்கி, தங்களது பண்ணைக்கே விற்க வந்து ஹரிவராசன் மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. மேலும், இவர்கள் அனுப்பிய பணத்தை குதிரை பராமரிப்புக்கு பயன்படுத்தாமல், மோசடி செய்து இருப்பதுடன், பராமரிக்க கொடுக்கப்பட்ட குதிரைகளை விற்று மொத்தம் ரூ.2½ கோடி வரை மோசடி செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து, மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஜெயா நாயர் புகார் அளித்ததன் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த மோசடி குறித்து விசாரணை நடத்தினர்.

பின்னர், மோசடி உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து ஹரிவராசன், அவருடைய அண்ணன் அரவிந்த கிருஷ்ணன், தந்தை சீனிவாசன் ஆகியோரை கைது செய்து, அவர்களிடம் பராமரிப்பில் இருந்த 11 குதிரைகளை மீட்டனர்.

பின்னர், மோசடியில் ஈடுபட்ட மூவரும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...