திருப்பூரில் பழைய வேஸ்ட் குடோனில் திடீர் தீ விபத்து - ஒரு கோடி மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாகி சேதம்

பெருமாநல்லூர் அடுத்த போயம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வந்த பழைய பொருட்கள் குடோனில் நேற்றிரவு ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஒரு கோடி மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையான நிலையில், விளக்கு அல்லது பட்டாசால் தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என தகவல்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அடுத்த போயம்பாளையம் பகுதியில் இரும்புக்கடை நடத்தி வருபவர் ஶ்ரீ ராம். மேலும் அதே பகுதியில் இவருக்கு சொந்தமாக பழைய பொருட்களை சேமித்து வைக்கும் குடோன் ஒன்றும் செயல்பட்டு வருகிறது.



இந்நிலையில் நேற்றிரவு ஏழு மணியளவில், அந்த குடோனிலிருந்து புகை வந்துள்ளது. பின்பு திடீரென தீப்பற்றி எரிந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து உடனடியாக அருகிலிருந்தவர்கள் திருப்பூர் வடக்கு தீயணைப்பு துறையினர் மற்றும் அனுப்பர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.



இதன் அடிப்படையில் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் 2 தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் 2 மணி நேரத்திற்கும் மேல் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீ விபத்து குறித்து குடோன் உரிமையாளர் கூறியதாவது, குடோனை இரவு நேரம் பயன்படுத்தாத காரணத்தால் குடோனில் மின் இணைப்பு இல்லை. நேற்று கார்த்திகை தீபம் என்பதால் அருகிலுள்ள வீடுகளிலிருந்து விளக்கோ அல்லது பட்டாசோ விழுந்து தீப்பிடித்திருக்கலாம்.

இந்த தீ விபத்தின் காரணமாக குடோனில் இருந்த கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்து உள்ளன.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து அனுப்பர்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...