கோவை அருகே தென்னந்தோப்பிற்குள் புகுந்த 12 அடி நீள மலை பாம்பு - வனத்துறையினரிடம் ஒப்படைப்பு

கோவை எட்டிமடை பகுதியில் தென்னை தோப்பிற்குள் புகுந்த 12 அடி நீள மலை பாம்பு பத்திரமாக பிடிக்கப்பட்டு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.


கோவை: கோவை - பாலக்காடு நெடுஞ்சாலையில் உள்ள எட்டிமடை பகுதியை சேர்ந்தவர் சண்முகம். விவசாயியான இவரது வீட்டின் அருகே உள்ள தென்னை தோப்பிற்குள் சுமார் 12 அடி நீளமுள்ள மலைபாம்பு புகுந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து பாம்பு பிடிப்பதில் கைதேர்ந்தவர்களான WHCT அமைப்பினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அங்கு வந்த அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் மலைப்பாம்மை லாவகமாக பிடித்து மதுக்கரை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து அந்த பாம்பு அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு விடப்பட்டது.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...