கோவையில் கொரோனாவுக்கு முன்பு இயக்கப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும்- வானதி சீனிவாசன் கோரிக்கை

கோவை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கொரோனா காலத்துக்கு முன்பு இயக்கப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவை,சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார்.



கோவை: மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவை, கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், பா.ஜ.க. மகளிரணி தேசியத் தலைவருமான வானதி சீனிவாசன் டெல்லியில் நேரில் சந்தித்து கோரிக்கை கடிதத்தை அளித்துள்ளார்.

அக்கடிதத்தில் அவர் தெரிவித்ததாவது:

கோவை மக்களின் ரயில்வே துறை தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.ரயில் நிலையங்கள் மறுசீரமைப்புத் திட்டத்தின்கீழ் கோவை ரயில் நிலையத்தை, உலகத் தரம் வாய்ந்த ரயில் நிலையமாக மாற்ற வேண்டும். போதுமான வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட வசதிகளுடன் வட கோவை ரயில் நிலையத்தை மேம்படுத்த வேண்டும்.

மேலும் தமிழகம் மற்றும் கேரள மாநில மக்கள் பயன்பெறும் வகையில் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயிலை, கோவை வரை நீட்டிக்க வேண்டும். கோவையிலிருந்து திருச்செந்தூருக்கு நேரடி ரயில் இயக்க வேண்டும்.

பாம்பன் ரயில் பாதை சீரமைப்புக்காக நிறுத்தப்பட்ட, மேட்டுப்பாளையத்திலிருந்து, கோவை வழியாக ராமேஸ்வரத்திற்கு இயக்கப்பட்ட ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என்றும் அதுபோல கோவை பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று, கோவையிலிருந்து, பெங்களூருவுக்கு இரவு நேர ரயில்களை இயக்க வேண்டும் என கூறினார்.

மேலும் கொரோனாவுக்கு முன்பு வரை, இயக்கப்பட்ட பொள்ளாச்சி - கோவை இடையேயான ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என்ற கோவை, பொள்ளாச்சி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

அதுபோல, பாலக்காட்டில் இருந்து கோவை, போத்தனூர், கிணத்துக்கடவு வழியாக திருச்செந்தூர் வரை இயக்கப்பட்ட, 'பாலக்காடு - திருச்செந்தூர் - பாலக்காடு' தினசரி ரயிலை மீண்டும் இயக்க வேண்டும்.

இவ்வாறு கடிதத்தில் வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

இந்த கோரிக்கை கடிதத்தை பெற்றுக்கொண்ட அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ், கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகவும், 300 கோடி ரூபாய் மதிப்பில், கோவை ரயில் நிலையம் உலகத் தரம் வாய்ந்த ரயில் நிலையமாக மாற்றப்படும் என்றும் வாக்குறுதி அளித்துள்ளார்.

Newsletter

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...

கோவையில் ரூ.86 லட்சத்தில் 43 மின்கல வாகனங்கள் மற்றும் தெரு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் பவ...

கூடலூர் நகராட்சியில் 27 வார்டுகளிலும் தீவிர டெங்கு கொசு ஒழிப்புப் பணி

கோவை கூடலூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க கொசு மற்றும் கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் தீவி...

கோவையில் வீட்டில் நகை பணம் இல்லாததால் பொருட்களை உடைத்துவிட்டு தப்பிய திருடன்

கோவை ராமநாதபுரத்தில் ஐ.டி நிறுவன ஊழியர் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் திருடச் சென்ற ஆசாமி, நகை பணம் எதுவும் கிடைக்காததால் ஆத்...

கோவை அசோகபுரம் ஆசிரியர் காலனி ரவுண்டானாவில் 6 அடி உயர வெண்கல திருவள்ளுவர் சிலை திறப்பு

கோவை அசோகபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் முடிவில் உள்ள ஆசிரியர் காலனி ரவுண்டானாவில், தனி...

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...