"தேசிய மற்றும் சர்வதேச வளர்ச்சியில் உயர்கல்வியின் பங்கு" என்னும் தலைப்பில் ஸ்ரீ கிருஷ்ணா கலைக் கல்லூரியில் இரண்டாவது நாளாக சர்வதேச கருத்தரங்கம்


அகில இந்திய முதல்வர்கள் சங்கம் மற்றும் கோவை குனியமுத்தூரில் செயல்பட்டு வரும் ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து 18வது சர்வதேச கருத்தரங்க மாநாட்டினை 'தேசிய மற்றும் சர்வதேச வளர்ச்சியில் உயர்கல்வியின் பங்கு" என்னும் தலைப்பில் இரண்டாவது நாளாக அக்கல்லூரியில் இன்று நடத்தியது. 



இதில் அமெரிக்காவில் இருந்து டெலிகாம் இன்வென்டர் நிறுவனர், தேசிய அறிவுசார் நிறுவன தொழில் நிறுவனர் மற்றும் ஆலோகர் முனைவர். சாம்பிட்ரோடா காணொலி கண்காட்சியின் மூலம் இந்தியாவில் உள்ள கல்லூரி முதல்வர்களுக்கு உரையாற்றினார். 

இதில் அவர் பேசிய போது, இந்தியாவில் அரசியல்வாதிகளுக்கே அரசியல் கற்றுக் கொடுக்கும் வேந்தர்களாக பல்கலைக்கழக வேந்தர்கள் மாறிவிட்டார்கள். கல்வித்துறையில் உயர்பதவி அடைய அரசியல்வாதிகளின் துணை வேண்டிய நிலை இந்திய கல்வித்துறை வளர்ச்சியினை பின்நோக்கி செல்ல வைத்துள்ளது.

ஆராய்ச்சிகளின் மூலம் உருவாகும் சாதனைகள் மற்றும் படைப்புகள் மிகவும் குறைந்து வருகின்றன. கல்வித்துறை வளர வேண்டுமானால் திறமையானவர்களுக்கு மட்டும் உயர் பதவியினை வழங்க வேண்டும். 

இந்திய உயர்கல்வித்துறை முற்றிலும் அரசு உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளால் ஆக்கிரமப்பட்டுள்ளது.  இந்தியாவில் உயர் கல்வித்துறை மிகவும் கேவலமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 

பல்கலைக் கழகங்களுக்கு துணைவேந்தராக செல்ல வேண்டுமானால் அரசியல் செல்வாக்கில்லாமல் செல்ல முடியாது. இந்தநிலை நீடித்தால் தலைச்சிறந்த திறமையான கல்வியாளர்கள் இந்தியாவில் கல்வித்துறையில் உயர் பதவியினை திறமையால் அடைய முடியாது. 

இதனால் கல்வித்தரம், ஆராய்ச்சி கீழே தள்ளப்பட்டுள்ளது. கரைபடிந்த கல்வியாளர்களால் கல்வித்துறையில் மாற்றத்தினை மற்றும் மறுமலர்ச்சியினை உறுதியாக கொடுக்க முடியாது. 

எதிர்காலம் தொழில் நுட்பத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ரோபோக்கள் நம்மை ஆளும் காலம் வந்துவிட்டது. இந்த நிலையில் அரசியல்வாதிகளால் உயரிய பொருப்பினை அடைந்த இவர்கள் வளர்ச்சிக்கு பாடுபடமாட்டார்கள்.

கற்றல் முறையிலும் இன்னும் நாம் பழைய நிலையிலேயே உள்ளோம். வளர்ந்த நாடுகள் கல்வித்துறையில் தொழில் நுட்பத்தினை கொண்டுவந்துவிட்டார்கள். ஆராய்ச்சியும் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. புதிய படைப்புகள் குறைந்து வருகின்றன. ஆராய்ச்சியின் பயன்பாடும் மிகவும் குறைந்து வருகிறது. 

கல்வித்துறையில் உயர் பதவியினை அடைய திறமை மட்டும் பயன்படுத்த வேண்டும் என வேதனையுடன் தெரிவித்தார்.  திறமையான பேராசிரியர்கள் திறம்பட செயல்பட முடியாத நிலையில் தள்ளப்பட்டுள்ளார்கள். நேர்மையான கல்வியாளர்களின் பங்கு குறைந்து வருகிறது மட்டும் அல்ல இவர்களின் திறமையினை வளர்க்க விடுவதில்லை. 

இதற்காக கல்லூரி முதல்வர்கள் ஒருங்கிணைந்து எதிர்க்க வேண்டும். கல்லூரி முதல்வர்கள் இதற்காக ஒருங்கிணைந்து செயல்பட்டு கல்வித்துறையில் மாற்றங்களை கொண்டுவர வேண்டும் எனக் கூறினார். 



இக்கல்விக் குழுமங்களின் முதன்மை நிர்வாக அலுவலர் முனைவர். கி.சுந்தரராமன், இக்கல்லூரியின் முதல்வர் முனைவர். பாபாஞானக்குமார் இக்கருத்தரங்கினை வழிநடத்தினார்.

இம்மாநாட்டில் இந்தியாவிலிருந்து பல்வேறு கல்லூரிகளின் முதல்வர்கள், பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் தலைசிறந்த கல்வியாளர்கள் என மொத்தம் 300 பேர் கலந்து கொண்டனர்.

Newsletter

மாணவர் அமுதன் மரணம், தமிழகத்தில் அதிகரிக்கும் குற்றங்களை கண்டித்து கோவையில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

கோவை மாணவர் அமுதன் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தமிழகத்தில் கொலை, கொள்ளை மற...

கோவை நவக்கரை ஏ.ஜே.கே. கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வுடன் சிறப்பான ஓணம் விழா

கோவை நவக்கரையில் உள்ள ஏ.ஜே.கே. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 14 முதல் 20 வரை ஓணம் விழா கொண்டாடப்பட்டது. போதைப்...

பேரூர் பகுதியில் 1.10 டன் புகையிலை பொருள்கள் பறிமுதல்: ஒருவர் கைது

கோவை மாவட்ட காவல்துறை பேரூர் பகுதியில் சுமார் 1.10 டன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ஒருவரை கைது செ...

மசக்காளிபாளையம் நகராட்சிப் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் முதலிடம்

கோயம்புத்தூர் மாவட்ட அளவில் நடைபெற்ற கேரம் போட்டியில் மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்கள் ஒற்றையர் மற்று...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் பொள்ளாச்சி பிரதான சாலையில் முட்புதர் அகற்றும் பணி

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண் 98ல் பொள்ளாச்சி பிரதான சாலை எல்ஐசி காலனி பகுதியில் சாலையோர செடிகள் மற்றும் முட...

கோவை ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி – உயிர் அமைப்பு இடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை வலுப்படுத்த ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மற்றும் உயிர் அமைப்பு இடையே புரிந்துண...