பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து நிலை ஊழியர்களையும் பத்திரிக்கையாளர் நல வாரியத்தில் சேர்க்க தமிழக அரசு ஒப்புதல் வழங்கியது

தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் பத்திரிக்கை நிறுவனங்களில் பணிபுரியக்கூடிய அனைத்து கடை நிலை ஊழியர்களும் நல வாரியத்தில் சேர்ப்பது குறித்து முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன் செயலாக்கம் விரைவில் ஆன்லைன் வழியே தொடங்கும் எனவும் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.


சென்னை: கடந்த சில தினங்களுக்கு முன் பத்திரிகையாளர் நல வாரியத்தில் உறுப்பினராக சேர்வதற்கான படிவம் வெளியிடப்பட்டது. அந்த படிவத்தில் அரசு அங்கீகார அட்டை, செய்தியாளர் அங்கீகார அட்டை அல்லது அரசு இலவச பஸ் பாஸ் வைத்திருப்பவர்கள் மட்டுமே வாரியத்தில் உறுப்பினராக சேரமுடியும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிபந்தனையினால், 90 சதவீத பத்திரிகையாளர்கள் வாரியத்தில் உறுப்பினராக சேர முடியாது என்றும், பெரும்பாலும் ஊடக முதலாளிகளும் பத்திரிகை நிறுவனங்களில் உயர் பொறுப்புகளிலும் உள்ளவர்கள் மட்டுமே உறுப்பினராக சேர முடியும் என்பதையும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியது.

ஆகவே, அச்சு, காட்சி, டிஜிட்டல் என்ற என்ற பாகுபாடின்றி அதில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் அனைவரையும் உறுப்பினர்களாக சேர்க்கும் வகையில் விதிகளை மாற்ற வேண்டும் என்றும் சங்கம் அரசுக்கு கோரிக்கை வைத்தது.

இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் நல வாரியக் கூட்டத்தில் அனைத்து பத்திரிகையாளர்களையும் வாரியத்தில் உறுப்பினராக சேர்ப்பது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. வாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள மூத்த பத்திரிகையாளர்கள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து, அனைத்து பத்திரிகையாளர்களையும் வாரியத்தில் உறுப்பினர்களாக சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று செய்தித்துறை அமைச்சரும், பத்திரிகையாளர்கள் நலவாரியத்தின் தலைவருமான மு.பெ.சாமிநாதன் உறுப்பினர்களிடம் உறுதியளித்தார்.

அதன்படி வாரியத்தில் உறுப்பினர்களாக சேர்வதற்கான திருத்தப்பட்ட விதிமுறையை விரைவில் வெளியிட வேண்டும் என்று சங்கம் வலியுறுத்தியது.

அதன் தொடர்ச்சியாக மக்கள் தொடர்பு துறை சார்பில் பத்திரிகையாளர் நல வாரிய கூட்டம் செய்தி துறை அமைச்சர் சுவாமிநாதன் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பத்திரிகையாளர்கள் நலன் காக்கும் வகையில் பத்திரிக்கையாளர் நல வாரியம் அமைக்கப்பட்டும் நலத்திட்ட உதவிகள் வழங்க ஏதுவாக பத்திரிகையாளர் நல வாரிய குழு அமைக்கும் ஆணைகள் வெளியிடப்பட்டன.

அதன்படி பத்திரிகையாளர் நலக்குழுவின் மூன்றாவது கூட்டத்தில் மிக முக்கியமாக நல வாரியத்தின் புதிய உறுப்பினர்களின் சேர்க்கை தொடர்பாக விவாதிக்கப்பட்டது அதில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியான பத்திரிக்கையாளர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பு அரசு அங்கீகார அடையாள அட்டை வைத்திருக்கக்கூடிய பத்திரிகையாளர் மட்டும் இடம்பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகளில் பணிபுரியக்கூடிய அனைத்து நிலை ஊழியர்களுக்கும் பத்திரிகையாளர் நல வாரியத்தில் உறுப்பினர் அடையாள அட்டை வழங்க ஏதுவாக அனைத்து நிலை ஊழியர்களையும் பத்திரிக்கையாளர் நல வாரியத்தில் சேர்ப்பது குறித்து ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஒரு நிறுவனத்தில் 10 பேர் மட்டுமே நலவாரிய உறுப்பினராக சேர முடியும் என்று இருந்த நிலையில் தற்போது நிறுவனங்களில் பணிபுரியக்கூடிய செய்தியாளர் ஒளிப்பதிவாளர் ஆசிரியர் உதவி ஆசிரியர் ஆடியோ இன்ஜினியர் உள்ளிட்ட அனைத்து நிலைகளிலும் இருக்கக்கூடிய ஊழியர்களை பத்திரிக்கையாளர் நல வாரியத்தில் சேர்ப்பது குறித்து முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் ஓரிரு நாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

Tragedy in Tiruppur: Conductor Sleeping in Front of Bus Run Over, Killed

A 23-year-old bus conductor was killed in a tragic accident in Tiruppur after a private bus driver allegedly failed to n...

திருப்பூரில் பரிதாபம்: பேருந்து முன்பாக படுத்திருந்ததை கவனிக்காத ஓட்டுனர் – நடத்துனர் பலி.

திருப்பூரில் பேருந்தின் முன்பாக படுத்து உறங்கியிருந்த இளம் நடத்துனர் சூர்யா (23) மீது, ஓட்டுனர் கவனிக்காமல் பேருந்தை இயக...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்த ஒன்றிய அரசு - நீட் தேர்வு ரத்து கோரி பல்சமய நல்லுறவு இயக்கம் வலியுறுத்தல்

கோயம்புத்தூரில் பல்சமய நல்லுறவு இயக்கம் நீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து, வட மாநிலங்களில் வினாத்தாள் கசிவு ம...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்த ஒன்றிய அரசு - முறைகேடுகளுடன் நடக்கும் NEET தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தல்

NEET தேர்வில் தொடர் முறைகேடுகள் நடந்து வருவதாக குற்றம்சாட்டி, பல்சமய நல்லுறவு இயக்கம் உடனடியாக தேர்வை ரத்து செய்ய வேண்டு...

AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வி.பி.கந்தவேல் கட்சியிலிருந்து ராஜினாமா

கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வி.பி.கந்தவேல், கட்சியின் தற்போதைய நிகழ்வுகளால் மன...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...