கோவை விழாவின் ஒரு பகுதியாக பிஎஸ்ஜி கல்விக் குழுமத்தில் புதையல் வேட்டை நிகழ்ச்சி கொண்டாட்டம்


கோயமுத்தூர் யெங் இந்தியாவின் சார்பில் கோவையில் நடைபெற்று வரும் கோவை விழாவின் ஒரு பகுதியாக இன்று பிஎஸ்ஜி கல்விக் குழுத்தில் புதையல் வேட்டை என்னும் போட்டி நிகழ்ச்சி நடத்தப்பட்டது.



இதில், இரண்டு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் இயக்கக் கூடியவர்களும் ஏராளமான பெண்களும் என மொத்தம் 10 அணிகள் பங்கேற்றனர்.

பங்கேற்பாளர்கள் போட்டியின் தொடக்க புள்ளியாக ஒரு இடத்தில் இருந்து தொடங்கி கிடைக்கப்பெரும் குறிப்புகள் மூலம் இறுதிப் பகுதியை அடைய வேண்டும். 

இதன் துவக்கப் பகுதி பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரி ஆகும். அங்கிருந்து போட்டியாளர்கள் ஒவ்வொரு குறிப்புகளையும் சேகரித்து அக்கல்லூரியின் அருகில் உள்ள பிஎஸ்ஜி சர்வோஜனா பள்ளியில் நான்காவது குறிப்பை எட்டினர்.

இதைத்தொடர்ந்து மாணவர்கள் உறுப்பினர்களால் குறிப்புகள் வழங்கப்பட்டு இந்த போட்டியின் பயணமானது நகரம் முழுக்க சென்று நிறைவடைந்தது.

இப்போட்டியின் நிரைவாக இருசக்கர வாகனம் மற்றும் நான்று சக்கர வாகனம் ஓட்டி இலக்கை அடையும் போட்டியில் பிஎஸ்ஜி கல்லூரி மாணவர்கள் வென்றனர்.



இதில் சிறப்பாக வாகனம் ஓட்டியதற்காக பெண்கள் அணிக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து வெற்றிபெற்றோர்களுககு பிஎஸ்ஜி கல்விக் குழும இயக்குநர் ஆர்.நந்தகோபால் பரிசுகளை வழங்கினார்.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...