இனிமேல் யாருடனும் பைக்கில் வேகமாக செல்ல மாட்டேன் - டிடிஎஃப் வாசனுடன் சென்றது குறித்து ஜி.பி.முத்து கருத்து

தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்க கோவை வந்த ஜி.பி.முத்து, டிடிஎஃப் வாசனுடன் பைக்கில் சென்றது குறித்த கேள்விக்கு, இனிமேல் யாருடனும் பைக்கில் வேகமாக செல்ல மாட்டேன் என்றார்.



கோவை: கோவையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் டிக்டாக் மூலம் பிரபலமான யூடியூபர் ஜி.பி. முத்து கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, டிக்டாக் மூலம் அறிமுகமாகி ஊடகங்கள் துணையுடன் தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறேன்.

திரைத்துறையில் எனக்கு சிறந்த ஒத்துழைப்பு இருக்கிறது. பிக் பாஸ் அனுபவம் சிறப்பாக இருந்தது. பிக் பாஸ் மூலம் நடிகர் கமல்ஹாசனை சந்தித்தது மிக பெரும் பாக்கியம்.

குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தாலேயே பிக் பாஸை விட்டு வெளியேறினேன். தற்போது ஐந்து திரைப்படங்களில் நடித்து வருகிறேன். நடிகை சன்னி லியோனுடன் திரைப் படத்தில் நடித்தது மகிழ்ச்சி.

நான் அவரைப் பார்த்து ஐ லவ் யூ என கூறியவுடன் அவர் என்னை பார்த்து கியூட் என கூறிய போது சிலிர்த்து போனேன்.

கோவையில் யூடியூபர் டி.டி.எஃப்.வாசன் உடன் அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் சென்றது குறித்த கேள்விக்கு, இதுவரை தான் யாருடனும் அது போன்று வேகமாக சென்றதில்லை. இந்த சம்பவத்திற்கு பிறகு இனிமேல் யாருடனும் அவ்வாறு செல்ல மாட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...