ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரிக்கு சிறந்த சாலை பாதுகாப்பு பங்களிப்பு விருது!

டெல்லியில் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு சார்பில் எப்.ஐ.சி.சி.ஐ சாலை பாதுகாப்பு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில், சாலை பாதுகாப்புக்காக சிறந்த பங்களிப்புகளை வழங்கிய கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரிக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.


கோவை: கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரிக்கு சாலை பாதுகாப்புக்காக சிறந்த பங்களிப்புகளை வழங்கியதற்காக விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்ட சிறப்பு சாலை பாதுகாப்பு பணி குழுவின் கல்வி பங்குதாரர் என்ற முறையில் கல்லூரியின் சிவில் இன்ஜினியரிங் துறையைச் சார்ந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் குழு சாலை பொறியியல் ஆய்வை மேற்கொண்டது.

கோயம்புத்தூரில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹாட்ஸ்பாட்டுகளில், சாலை விபத்துகளை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் பல்வேறு சாலை பாதுகாப்பு விதிகளை பரிந்துரைப்பதில் சிறப்பாக பணிபுரிந்த ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரிக்கு சிறந்த சாலை பாதுகாப்பு பங்களிப்பு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதிலிருந்து கலந்து கொண்ட கல்வி நிறுவனங்களில் இக்கல்லூரி மட்டுமே விருது பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

புதுடெல்லியில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் ஒடிசா அரசின் நீர்வளம், வணிகம் மற்றும் போக்குவரத்து அமைச்சர் ஸ்ரீமதி துகுனி சாஹு, புதுதில்லியில் உள்ள எப். ஐ. சி .சி ஐ நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மன்றத்தின் தலைவர் எம் .பி ராஜீவ் பிரதாப் ரூடி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில், திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய கல்லூரியின் பேராசிரியர் ஹேமா மற்றும் சிவில் இன்ஜினியரிங் துறை மாணவர்கள் ராகுல் பிரசாத், தக்ஷின், சுமன் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது.

மேலும் பிற்பகலில் நடைபெற்ற சாலை பாதுகாப்பில் கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்கு குறித்த மாநாட்டில் பேராசிரியர் ஹேமா சாலை பாதுகாப்பினில் பின்பற்றும் விதிகளில் கல்வி நிறுவனங்களின் பங்களிப்பு என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

விருது பெற்றவர்களை எஸ்.என்.ஆர் சன்ஸ் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமி நாராயணசுவாமி கல்லூரி முதல்வர் முனைவர் என்.ஆர் அலமேலு, சிவில் இன்ஜினியரிங் துறை தலைவர் முனைவர் சரோஜினி ஆகியோர் பாராட்டினர்.

Newsletter

CBSE 12ஆம் வகுப்பு முடிவுகள் இன்று அல்லது நாளை வெளியாகுமா? அதிகாரபூர்வ அறிக்கை எதிர்பார்ப்பு

CBSE 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் 2026 இன்று அல்லது நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் 10-ல்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்

கோவை மாநகராட்சி சுகாதாரத்துறையுடன் இணைந்து ஶ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரி ஏப்ரல் 17 அன்று வாக்காளர் விழிப்புணர்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் தேர்தல் எழுத்தறிவு மன்றம் சார்பில் மாணவிகள் முகவர்ணம்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் கல்வி-தொழில்துறை இடைவெளியை நிரப்பும் 'பிரிட்ஜ் மாநாடு 2026' நடைபெற்றது

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி மற்றும் கோயம்புத்தூர் மேலாண்மைச் சங்கம் இணைந்து 'பிரிட்ஜ் மாநாடு 2026' நடத்த...

ஆராய்ச்சி படிப்புகளை வலுப்படுத்த கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகம் புதிய ஒப்பந்தம்

கோவை தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌ மற்றும்‌ அமிர்தா விஸ்வ வித்ய பீடம் ஆகியவற்றுக்கு இடையே உணவு விநியோகச்‌ சங்கிலி...

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தரங்கில் பாலியல் வன்கொடுமையில் இருந்து காத்து கொள்வதும், தடுப்பதும் குறித்து எட...