கோவை வேளாண் பல்கலை., பூச்சியல் துறை மாணவிகளுக்கு SJSGC உதவித்தொகை!

பெண்களின் உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையில், UGC வழங்கும் 2022ஆம் ஆண்டுக்கான ஒற்றை பெண் குழந்தைகளுக்கான சாவித்ரிபாய் ஜோதிராவ் ஃபுலே உதவித்தொகை கோவை வேளாண் பல்கலையில் பூச்சியியல் துறை மாணவிகள் 4 பேருக்கு அறிவிப்பு.


கோவை: பெண்களின் உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையில், UGC வழங்கும் 2022ஆம் ஆண்டுக்கான SJSGC உதவித்தொகை கோவை வேளாண் பல்கலையில் பூச்சியியல் துறை 4 மாணவிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களின் நிலையை மேம்படுத்த இந்திய மத்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. பெண்களின் உயர்கல்வியை ஊக்குவிக்க, பல்கலைக்கழக மானியக்குழு, ஒற்றை பெண் குழந்தைகளுக்கான சாவித்ரிபாய் ஜோதிராவ் ஃபுலே உதவித் தொகையை (SJSGC) நிறுவியுள்ளது.

SJSGC என்பது முனைவர் பட்டபடிப்பு வரையிலான படிப்பைத் தொடர்வதற்கான உதவித்தொகை திட்டமாகும். இந்தத் திட்டத்தின் இலக்கு ஒற்றை பெண் குழந்தை என்பதாகும். ஒவ்வொரு ஆண்டும் தகுதியான விண்ணப்பங்களின் அடிப்படையில் உதவித்தொகை பெறும் மாணவர்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும்.

2022 ஆம் ஆண்டிற்கான உதவித்தொகை வாய்ப்புகள் செப்டம்பர் 2022 இல் அறிவிக்கப்பட்டது.



கோவை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்ள வேளாண் பூச்சியியல் துறையில் முனைவர் பட்டபடிப்பு படித்துக் கொண்டிருக்கும் மாணவிகள் வி.பி.அபர்ணா, சு.வெ.தாரிணி, கி.இலக்கியா மற்றும் செ.பரிபூரணி ஆகியோர் SJSGC உதவித் தொகை பரிசீலனைக்காக UGC க்கு தங்கள் ஆராய்ச்சி முன் மொழிவை வழங்கியிருந்தனர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் முடிவுகள் 06.02.2023 அன்று UGC இணையதளத்தில் வெளியிடப்பட்டன. விண்ணப்பித்திருந்த நான்கு மாணவிகளும் உதவித் தொகை பெறுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

உயர்கல்வி ஊக்கத் தொகை பெறவுள்ள மாணவிகளுக்கு பல்கலைக்கழக துணைவேந்தர், பயிர் பாதுகாப்பு மைய இயக்குனர், முதன்மையர் (முதுகலைபடிப்பு) மற்றும் வேளாண் பூச்சியியல் துறைத்தலைவர் மற்றும் பிற கல்வியாளர்கள் பாராட்டி ஆராய்ச்சியில் சாதனை புரிய வேண்டும் என வாழ்த்து தெரிவித்தனர்.

Newsletter

CBSE 12ஆம் வகுப்பு முடிவுகள் இன்று அல்லது நாளை வெளியாகுமா? அதிகாரபூர்வ அறிக்கை எதிர்பார்ப்பு

CBSE 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் 2026 இன்று அல்லது நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் 10-ல்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்

கோவை மாநகராட்சி சுகாதாரத்துறையுடன் இணைந்து ஶ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரி ஏப்ரல் 17 அன்று வாக்காளர் விழிப்புணர்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் தேர்தல் எழுத்தறிவு மன்றம் சார்பில் மாணவிகள் முகவர்ணம்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் கல்வி-தொழில்துறை இடைவெளியை நிரப்பும் 'பிரிட்ஜ் மாநாடு 2026' நடைபெற்றது

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி மற்றும் கோயம்புத்தூர் மேலாண்மைச் சங்கம் இணைந்து 'பிரிட்ஜ் மாநாடு 2026' நடத்த...

ஆராய்ச்சி படிப்புகளை வலுப்படுத்த கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகம் புதிய ஒப்பந்தம்

கோவை தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌ மற்றும்‌ அமிர்தா விஸ்வ வித்ய பீடம் ஆகியவற்றுக்கு இடையே உணவு விநியோகச்‌ சங்கிலி...

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தரங்கில் பாலியல் வன்கொடுமையில் இருந்து காத்து கொள்வதும், தடுப்பதும் குறித்து எட...