கோவை எம்விஎஸ் கிரிட்டோரியம் மற்றும் தமிழ்நாடு சைக்கிளிங் சங்கம் இணைந்து எம்விஎஸ் சைக்கிள் திருவிழா- 2017 வரும் பிப். 4ல் துவக்கம்

மக்களிடம் சைக்கிள் மீதான ஆவலைத் தூண்டும் வகையில் தமிழ்நாடு சைக்கிளிங் சங்கத்துடன் கோவை எம்விஎஸ் கிரிட்டோரியம் இணைந்து கரிமோட்டார் ஸ்பீடுவேயில் எம்விஎஸ் சைக்கிள் திருவிழா- 2017 என்னும் சைக்கிள் நிகழ்சியை பிப்ரவரி 4ம் தேதியன்று நடத்தவுள்ளது.

இந்நிகழ்ச்சி கோவை என்டியூரா என்ற சாலையில் இல்லாமல், சைக்கிள் பந்தயத்துக்கென புதிய டிராக் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சிக்கு பங்குதாரர்களாக ஸ்காட் சைக்கிள்ஸ், டிஸ்ஸாட், இசுசூ, ரட்ஸ், எல்ஜி மற்றும் இணை பங்குதாரர்களாக தி ரெசிடென்ஸி டவர்ஸ் ஆகியவை இணைந்துள்ளன.



இப்போட்டிகள், புரபெஷனல், அம்ச்சூர் மென், பெண்கள், குழந்தைகள் 4- 8, சிறுவர்கள் 9- 13, 18 வயதுக்குட்பட்டவர்கள், மாஸ்டர்ஸ் ஆண்கள் மற்றும் மாஸ்டர்ஸ் பெண்கள், 35 வயதுக்கு மேற்பட்டவர்கள், முதியோர் 55 வயதுக்கும் மேல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

இப்போட்டி குறித்த தகவலுக்கு www.mvscoimbatorecriterium.com என்ற இணையதளத்தை தொடர்புகொள்ள வேண்டும். 

இப்போட்டியில் வெற்றிபெருவோருக்கு எம்விஎஸ் கிரிட்டோரியம், "தமிழ்நாடு சைக்ளிங் கிளப் சாம்பியன்ஷிப்" பட்டத்தை வழங்கவுள்ளது. மேலும், பரிசுத் தொகையாக மொத்தம் 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் வழங்கப்படவுள்ளது.

பரிசளிப்பு விழா கரிமோட்டார்ஸ் பந்தையப் பாதையில் பிப்ரவரி 4ம் தேதியன்று பகல் 2 மணியளவில் நடைபெறும்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இப்போட்டியின் இயக்குநர் அர்ஜுன் பாலா கூறுகையில், சைக்கிள் பந்தய வீரர்களை ஊக்குவிப்பதற்காக இந்த போட்டி முதன்முதலாக 2013-யில் நடைபெற்றது. ஒவ்வொரு வருடமும் இப்போட்டியில் பங்கேற்போரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே உள்ளது. கடந்த வருடம் 365 வீரர்கள் இதில் பதிவு செய்தனர். இவ்வருடம் தற்போதுவரை 150 பேர் பதிவு செய்துள்ளனர். 

2014யில் 7 பிரிவுகளாக நடைபெற்ற போட்டி 2016யில் இருந்து 10 பிரிவுகளாக நடைபெற்று வருகிறது. இது சைக்கிள் ஓட்டுபவர்களின் ஆர்வத்தை சுட்டிக்காட்டுகிறது.

இதில் பங்கேற்பவர்கள் குறித்து கேட்டபொழுது, பொதுவாக ஆண்களின் எண்ணிக்கை பெண்களை விட அதிகமாக இருக்கும். நாடு முழுவதும் இருந்து இப்போட்டியில் பங்கேற்க வீரர்கள் அதிகளவில் வருவர். இந்த போட்டியில் பங்கேற்க அமெச்சூர்க்கு 500, குழந்தைகளுக்கு 300, நிபுனர்களுக்கு 625 என வசூலிக்கப்படுகிறது. இப்போட்டி குறிப்பாக குழந்தைகளையும், அமெச்சூர்ஸ்களையும் மனதில் வைத்தே நடத்தப்படுகிறது" என்றார்.



தமிழ்நாடு சைக்கிள் அசோசியேசனைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் கூறுகையில், இப்போட்டியானது மாவட்ட அளவில் மட்டுமல்லாமல் மாநிலம், தேசிய அளவில் பெரிதாக வளரவேண்டும். சைக்கிள் ஓட்டுவதில் மக்களின் ஆர்வம் அதிகரித்து வருகிறது. இந்திய அளவில் இதனை நடத்தும் போது சைக்கிள் மீதான ஆர்வம் மேலும் அதிகரிக்கும்" என்றார்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...