மருத்துவ படிப்பிற்க்காக டெல்லி சென்று மர்மமான முறையில் உயிரிழந்த சரவணன் பெற்றோர் கோவையில் பேட்டி


மருத்துவ படிப்பிற்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை சென்று மர்மமான முறையில் உயிரிழந்த சரவணனின் மரணம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மருத்துவ மேல்படிப்பிற்காக திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சரவணன் என்பவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு கடந்த ஜூலை 10-ஆம் தேதி சரவணன் தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டது. 

இதையடுத்து அங்கு சென்ற அவரது பெற்றோர்கள் சரவணன் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும், அவர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறி வந்த நிலையில் சரவணன் பிரேத பரிசோதனை முடிவில் திட்டமிட்டே சரவணனுக்கு கையில் விஷ ஊசி செலுத்தப்பட்டது தெரியவந்துள்ளது.

இதைத்தொடர்ந்து, மகனின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் மத்திய அரசு மற்றும் தமிழக அரசிடம் வலியுறுத்தி தற்போதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டி உள்ளனர். 

அதேப் போல் திட்டமிட்டு தனது மகன் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், சரவணன் மரணம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். மேலும், தமிழக அரசும் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சரவணன் உயிரிழப்பிற்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். 

சரவணன் கொலையில் டெல்லி காவல்துறைக்கு தொடர்பு உள்ளதாக சந்தேகம் உள்ளதாகவும் தெரிவித்த அவர்கள், விரைவில் புதிய தமிழக தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதனை சந்தித்து அவரிடம் தங்களது கோரிக்கைகளை முன்வைக்க உள்ளதாகவும் கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...