சிறந்த மாநகராட்சி சேவைக்காக' டிஜிட்டல் இந்தியா' விருது பெற்ற கோவை மாநகராட்சி ஆணையர்



மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதன்படி, மாநகராட்சியில் கவனிப்பாரற்று உள்ள குப்பைத் தொட்டிகள், சிதிலமடைந்த சாலைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிப்பதற்காக என பல திட்டங்கள் டிஜிட்டல் வழியில் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டு அதில் வரும் புகார்களுக்கு உடனடி தீர்வுகளை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் மேற்கொண்டார்.

மேலும், பல திட்டங்களுக்கு வாட்ஸ்அப் எண் அறிமுகம் செய்து ஏராளமான தகவல்கள் மற்றும் நலத்திட்டங்களை நடைமுறையில் கொண்டுவந்துள்ளார்.



இதனை பாராட்டும் வகையில், மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா விருது 2016 கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்திகேயனுக்கு திங்களன்று வழங்கப்பட்டது.

புதுதில்லியில் அமைந்துள்ள விஞ்ஞான் பவனில் நடைபெற்ற இந்த விருது வழங்கும் விழாவில் மின்னணு, தகவல் தொழில்நுட்பம், சட்டம் மற்றும் நிதித்துறை மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மற்றும் மின்னணு தகவல் தொழில்நுட்பம், சட்டம் மற்றும் நிதித்துறை மத்திய இணை அமைச்சர் பி.பி.சௌதிரி ஆகியோர் இணைந்து கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர்க்கு டிஜிட்டல் இந்தியா வெள்ளி விருது வழங்கினர்.

இந்நிகழ்வின் போது மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் அருணா சுந்தரராஜன், கூடுதல் செயலாளர் அஜய்குமார், மத்திய தகவலியல் மைய தலைமை இயக்குநர் நீட்டா வெர்மா மற்றும் தொழில்நுட்ப இயக்குநர் அல்கா மிஸ்ரா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

மேலும், இந்நிகழ்ச்சியில் பிரதம மந்திரியின் கிராம சதக் யோஜனா விருதும் கோவை மாநகராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.

கோவை நகர மாநகராட்சி மட்டுமே குடிமக்களின் பங்களிப்புடன் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ள நகரமாகும். இது கோவை வாழ் மக்களுக்கு ஒரு பெருமைமிகு தருணம். நம்முடைய மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன் அதற்கு ஒரு அடித்தளத்தை அமைத்துள்ளார். அதுமட்டுமின்றி அனைவரும் மாநகராட்சியின் மேம்பாட்டில் பங்கேற்க ஒரு வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளார்.

கோவை மாநகராட்சிக்கு 26 திட்டம் சார்ந்த வாட்ஸ்அப் குழுக்கள் உள்ளது. அக்குழுக்கள் மூலம் தற்போதுவரை 40 திட்டங்கள் குடிமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் நிரைவேற்றப்பட்டுள்ளது.

இவை அனைத்திற்கும் காரணம், கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரான க.விஜயகார்த்திகேயன், பல்வேறு கட்ட குடிமக்களுடன் இணைந்து பணியாற்றுவதே ஆகும்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...